உன்ன ஹீரோயின் ஆக்குறேன்.. மீண்டும் ‘பொள்ளாச்சி சம்பவம்’! ஆசை காட்டிய தயாரிப்பாளர்! அதிர்ந்த கோவை!
கோவை : கோவையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படம் எடுப்பதாகவும், அதில் நடிக்க வைப்பதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னயை சேர்ந்த மாணவி ஒருவர் சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக முயன்று வந்துளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை நவகரையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் 'டிஎன் 41' என்ற முகநூல் பக்கத்தில் மூலம் பக்கத்தின் என்பவர் வெளியிட்ட நேர்காணல் விளம்பரத்தை பார்த்து 19.12.2019 தேதி பொள்ளாச்சி ராமகிருஷ்ணன் மேன்சன் என்ற தங்கும் விடுதிக்கு சென்று பார்த்திபனுடன் அறிமுகம் ஆகி உள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம்
அப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கு மாணவி தேர்வு செய்ததாகவும், பின்னர் மூன்று நாட்கள் மாணவியிடம் பேசி வந்தவர். பின்னர் 22.12.2019ஆம் தேதி மாணவிக்கு பார்த்திபன் மயக்க மருந்து கொடுத்து உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். மயக்கம் தெளிந்த பின்பு மாணவி தனக்கு நேர்ந்த கொடுரம் குறித்து கேட்டு பிரச்சனை செய்துள்ளார்.

மாணவியிடம் அத்துமீறல்
இதனையடுத்து பார்த்திபன் 18 வயது முடிந்தவுடன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் 20.11.2020 இணையதள வாயிலாக பதிவு திருமணம் செய்து கொண்டு கோவைப்புதூர் அறிவொளி நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் 15 மாதங்கள் பார்த்திபன் ஆசை வார்த்தைகளை கூறி அந்த மாணவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே பார்த்திபன், அந்த பெண்ணிடம் பழகுவதை நிறுத்தி, வேறுபெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

அதிரடி கைது
இந்நிலையில் தன்னை ஏமாற்றிய பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலை மறைவான பார்த்திபனை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தனிப்படை போலீசார் தேடி தேடிவந்தனர். இந்நிலையில் கோவையில் பார்த்திபன் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விரைந்து சென்ற அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கோவையில் வைத்து பார்த்திப்பினை கைது செய்தனர்.

பெரும் அதிர்ச்சி
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பார்த்தீபன் ஏற்கனவே இதுபோன்று, கோவை, கேரளா பகுதியை சேர்ந்த சில பெண்களை, ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் போக்சோ வழக்கு பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி ஜே.எம்1 கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications