எல்லாமே இன்று முதல் மாறுது.. கோவையில் இந்தெந்த ரூட்டெல்லாம் நோட் பண்ணுங்க.. போக்குவரத்து போலீஸ்
கோவை: கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனி முதல் கோவில்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் துவங்க உள்ள நிலையில், கோவை மாநகர காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அத்துடன், போக்குவரத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட துடியலூர் என் ஜி ஜி ஓ காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் இன்று முதல் நடைபெற இருப்பதால் துடியலூர் என் ஜி ஜி ஓ காலணியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வாகனங்கள் மற்றும் கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி செல்லும் வாகன போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.

கோவில்பாளையம்:
துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம் வெள்ளக்கிணர், வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, என் ஜி ஜி ஓ காலனி கணபதி நகர் சென்று வலதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம்.
கோவில் பாளையத்திலிருந்து துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையம் வழியாக கணபதி நகரில் இடதுபுறம் திரும்பி வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம்.
அத்திப்பாளையம்:
துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம் வெள்ளக்கிணர் சரவணம்பட்டி ரோடு கண்ணாம்பு கால்வாயில் இடது புறம் திரும்பி அத்திப்பாளையம் சென்று கோவில்பாளையம் செல்லலாம்.
கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் என் ஜி ஜி ஓ காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு:
மாற்றாக வாகனங்கள் கோவில்பாளையம் அத்திப்பாளையத்தில் இடது புறம் திரும்பி கண்ணாம்பு கால்வாய் வழியாக சரவணம்பட்டி காவல் சாலையில் வலதுபுறம் திரும்பி வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications