’காதல் மன்னன்’ பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ப்ளேபாய்! கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை நிர்வாகி மீது புகார்
கோவை : அடுத்தடுத்து பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பை சேர்ந்த நபர் மீது கோவையில் இரண்டு இளம் பெண்கள் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரை சேர்ந்த தீபா மற்றும் நாமக்கல் பகுதியை சேர்ந்த உமா ஆகிய இரண்டு பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் கரூர் மாவட்டம் பரமத்தி அடுத்த நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த கருணாநிதி - நிர்மலா தம்பதியரின் மகனான பார்த்திபன் தான் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை
கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை என்ற அமைப்பில் நிர்வாகியாக பணியாற்றி வருவதாகவும் கூறி பார்த்திபன் பல இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறுமிகளை கூட ஏமாற்றி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் கூறியுள்ளனர். தீபா என்ற பெண் கடந்த 2019ஆம் ஆண்டு 17 வயதே நிரம்பிய தீபா என்ற தன்னை பொள்ளாச்சியில் வைத்து திரைப்படம் எடுப்பதற்காக நேர்காணல் செய்ததாகவும் அப்போது குளிர்பானத்த மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம்
தனக்கு மயக்கம் தெளிந்ததும் தனது கால விழுந்து மன்னிப்பு கேட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் வரை கோவை கோவை புதூர் பகுதியில் தனிக்குடித்தனம் செய்து வருவதாகவும் கூறினார். திடீரென சில நாட்கள் ஊருக்கு செல்வதாக கூறி சென்ற பார்த்திபன் வீடு திரும்பாததால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் அழைப்பை எடுத்து தான் பார்த்திபனின் மனைவி என்று கூறியதுடன் தன்னை கேவலமான வார்த்தைகளால் திட்டியதன் பேரில் விசாரித்தபோது ஏற்கனவே பல பெண்களை இதேபோன்று அவர் ஏமாற்றியது தெரியவந்ததாகவும் பார்த்திபனின் மோசடிக்கு அவரது தாய் மற்றும் தந்தை உடந்தையாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீதான் என் மருமகள் என ஆசை வார்த்தையால் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

மோசடி
இதேபோல் நாமக்கல்லை சேர்ந்த உமா என்ற பெண்ணை கடந்த 2020"ம் ஆண்டு திருமணம் செய்ததாகவும் திருமணம் செய்த சில மாதங்களில் அவரை விட்டு சென்றதாகவும் கூறினார்.கோவை வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியில் தன்னுடன் வசித்து வந்த பார்த்திபன் அவ்வப்போது வீட்டிற்கு வருவதும் பின்னர் பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாக கூறி செல்வதும் வழக்கமாக வைத்திருந்ததாகவும் ஆனால் கடந்த ஓராண்டாக எந்தவித தொடர்பும் இல்லாமல் போயுள்ளது,

பல பெண்களுடன் தொடர்பு
இந்நிலையில் தான் அவரை பற்றி விசாரித்தபோது அவரது லேப் டாப் மற்றும் சமூக வலைதள பக்கம் ஆகிவற்றில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார். மேலும் காவல்துறையில் பலமுறை புகார் அளித்தோம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பார்த்திபனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதன் காரணமாகவே தங்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications