மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்.. இன்னும் 6 மாதத்தில் தொடங்கும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
கோவை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 6 மாதங்களில் தொடங்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை மதுக்கரை வட்டாரப் பகுதியில் வருமுன் காப்போம் திட்டம், காசநோய் கண்காணிப்பு மற்றும் நடமாடும் கதிர்வீச்சு வாகனம், துணை சுகாதார நிலையம், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான புதிய எந்திரம் உள்ளிட்டவவற்றை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட சுகாதார துறை இயக்குநர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மா.சுப்பிரமணியன் பேச்சு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 10 கோடி செலவில் காசநோய் கண்காணிப்பு மற்றும் நடமாடும் கதிர்வீச்சு வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இ-பார்வை திட்டம் மூலம் இதுவரை 1.15 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிற்கு மொத்தமாக 136 நிதிநிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 18 அறிவிப்புகள் கோவை மாவட்டத்தை சார்ந்தது. மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சையில் ரூ. 22 லட்சம் வரை காப்பீட்டு திட்டத்தில் மக்கள் பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.

கொரோனா பரவல்
தொடர்ந்து பேசிய அவர், கோவை அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் குறித்து ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் மற்றொரு மிஷின் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவலைப் பொறுத்தவரை 15க்கு மேற்பட்ட மாநிலங்களில் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 5 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

கட்டுப்பாடுகள் இருக்காது
ஓமைக்ரான் எனப்படும் கொரோனா வைரஸின் மற்றொரு மாதிரியான பிஏ4, பிஏ5 வகை வைரஸ் தான் அதிகமாக பரவி வருகிறது. இது வேகமாக பரவும் தன்மையுடையது. ஆனால் பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். தமிழகத்தில் இனி கடுமையான கட்டுப்பாடுகள் வராது. ஒரு இடத்தில் 40க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், நிச்சயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.

எய்ம்ஸ் பற்றி மா.சு.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 6 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமிழகம் வந்தபோது, கோவை மாவட்டத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
முன்னுக்குப் பின் முரண்.. ஏன் இவ்வளவு தடுமாற்றம்.. கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி -
சூலூர் கொடூரத்தை திசைதிருப்ப.. உதயநிதியை வைத்து ஏஐ போலி படம்.. தீவிரமாக பரவும் வதந்தி.. தவெக மூவ் -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
கடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.. விஜய் அதிரடி உத்தரவு! என் கவுண்டருக்கு தரப்பட்ட கிரீன் சிக்னல்? -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை! -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications