கோவை மக்களுக்கு குஷியான செய்தி.. குறைகிறது கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு ஒரு பலியும் இல்லை
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டம் தொற்றிலும், உயிர் பலியிலும் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது.
கோவை மட்டுமில்லாமல் அதன் அண்டை மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்கள், தனி பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிலை உருவானது. அவற்றுக்கு ஊரடங்கு தளர்வில் குறைவான தளர்வுகள் வழங்கியது அரசு.

அரசு நடவடிக்கை
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கைகள் படிப்படியாக குறைய தொடங்கியது.

4 மாதங்களுக்கு பிறகு பலியில்லை
நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் பலி இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மார்ச் 4ம் தேதி யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தொடர்ந்து மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது. 4 மாதங்களுக்கு பின் நேற்று உயிரிழப்பு ஏற்படாததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோவை நிலவரம்
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 334 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 392 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

குணமடைந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 322 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,107 ஆக உள்ளது. அந்த மாவட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக 3,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications