சிபிஎஸ்இ 6ம் வகுப்பு புத்தகத்தில் சனாதன பாடம்.. உடனடியாக நீக்கவும்..ஒன்றிய அரசை சாடும் ரா முத்தரசன்!
கோவை: சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் ( வர்ண முறைகள்) குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதை எரிக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் என ரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா முத்தரசன் கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் எம்.பி ஆ ராசா சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக, பாஜக வினர் கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர் என்று பேசினார்.

புத்தகத்தை எரிக்க வேண்டிய..
மேலும் அவர் கூறுகையில், ''ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சனாதன பற்றி ஒரு பாடம் உள்ளது. அதில் மேல் ஜாதி, கீழ் சாதி குறித்து படத்தோடு விளக்கம் உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாடம் இடம்பெற்றுள்ள புத்தகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

பாஜக சதி செய்கிறது
அண்ணாமலையை பார்த்து தான் கேட்கிறேன்... ஏன் இப்படி 6-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சனாதன பற்றி ஒரு பாடம் உள்ளது என்று... சனாதனம் குறித்து பேசிய ஆ ராசாவை கண்டித்து போராட்டம் நடத்தி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து, திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதிசெய்கிறது. கோவை, மதுரை உள்பட சில மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

உரிய நடவடிக்கை
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டுபிடித்து யார்.. யாராக.. இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காலம் தாமதம் இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரை சுட்டுக்கொன்ற , ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.. இதுக்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.. என்றார்.

வன்முறையை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசுகிறார்
வன்முறையை தூண்டக்கூடிய வகையில் அண்ணாமலை பேசுகிறார்... இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமளிக்கிறது. தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்குரிய சம்பளத்தை கொடுக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications