நாம் தமிழர் கார்த்திகா கைது.. வீடு புகுந்து கணவரையும் சேர்த்து தூக்கிய போலீஸ்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோவை: தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கோவையில் உள்ள வீடு புகுந்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மட்டுமின்றி அவரது கணவரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலமகளிர் பாசறை பொறுப்பாளராக இருப்பவர் கார்த்திகா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

karthika naam tamilar dharapuram

இந்த தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் விஜய் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சாலையில் வாக்குசேகரித்தது, காவல்நிலையத்தை முற்றுகையிட்டது, காவல்துறையின் பணிக்கு இடையூறு செய்தது என்று மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த 3 வழக்கின் அடிப்படையில் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கோவையில் வசித்து வரும் நிலையில் அங்கு சென்ற தாராபுரம் போலீசார் வீடு புகுந்து இருவரையும் கைது செய்தனர்.

தாராபுரம் சட்டசபை இடைத்ததேர்தல் பிரசாரத்தின்போது இந்த குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று மொத்தம் கார்த்திகா, அவரது கணவர் உள்பட மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாராபுரம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது போலீசார் நாம் தமிழர் கட்சியினரை பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பதாகவும், பேனர்களை அகற்றியதாவும் கூறி போராட்டங்கள் நடத்தினர். அப்போது அவர்கள் சாலைமறியல், போலீஸ் நிலையம் முற்றுகைகளில் ஈடுபட்டதால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 6 ம் தேதி முடிவடைந்த நிலையில் 9 ம் தேதி ரிசல்ட் வெளியானது. இதில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 66,841 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.

அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளுடன் 3வது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா 5,268 வாக்குகளுடன் 4ம் இடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளும் பெற்று 5ம் இடம் பிடித்தார். இதில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் ஆகியோர் டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+