கோவை சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேஷின் வீட்டில் வெடி மருந்து.. டிஜிபி சைலேந்திர பாபு பர பர தகவல்
கோவை: காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காணப்பட்டு உள்ள நிலையில் ஏற்கனவே அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும், அவரது காரில் ஆணிகள் கைப்பற்றப்பட்டதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் உக்கடத்தில் இன்று அதிகாலை மாருதி கார் திடீரென வெடித்து விபத்துக்கு உள்ளானது. காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலிண்டர் வெடிப்பு
விபத்துக்குள்ளான கார், வேகத் தடையில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. கார் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதியின் 4 திசைகளிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் பாதுகாப்பையும் தீவிரப்படுத்தினர்.

யார் அவர்?
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் முபின் என்பது தெரியவந்தது.

சைலேந்திர பாபு பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, "காரில் ஆணிகள், கோழி குண்டு போன்ற பொருட்களை கைப்பற்றியுள்ளோம். அவற்றை தடைய அறிவியல் துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த நபருடைய வீட்டில் சோதனை செய்ததில் ஸ்லோ என்டென்சி எக்ஸ்பிளோசிஸ் பொட்டாசியம் நைட்ரேட் அலுமினிய பவுடர் சல்பர் போன்ற சில பொருட்களை கைப்பற்றியுள்ளோம்.

என்.ஐ.ஏ விசாரணை
12 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளி யார் என்பதையும் இந்த நபர் யார்? சம்பவம் எப்படி நடந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்து உள்ளோம். அவர் ஓட்டி வந்த காரை 9 பேர் விற்று உள்ளார்கள். பத்தாவது நபர்தான் இந்த கார் வாங்கி உள்ளார். சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இறந்த நபரை விசாரணை செய்து உள்ளனர்.

தீவிர விசாரணை
ஜமேஷ் முபின் மீது வழக்குகள் கிடையாது. பொறியியல் பட்டதாரியான இவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இவரது செல்போனில் கடைசியாக தொடர்புகொண்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொண்டு செல்லவும் வாய்ப்புகள் உள்ளன." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications