கோவையை கலங்க வைத்த கார் சிலிண்டர் விபத்து! இலங்கை தாக்குதல் கும்பலுடன் தொடர்பா? வெளிவந்த பரபர தகவல்!
கோவை : இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீனை சிறையில் சந்தித்ததாக கோவை வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபெரோஸ் ஒப்புகொண்டுள்ள நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது குறித்து தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஃபெரோஸ் கேரளா சென்றதும் அங்கு சிறையில் இருந்தவர்களை சந்தித்ததும் அம்பலமாகியுள்ளது.
கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் அந்த ஐந்து பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சல் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அப்சல்கானை நவம்பர் 10ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை சிலிண்டர் வெடிப்பு
தற்போது இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான NIAக்கு முழுமையாக மாற்றப்படுகிறது. முன்னதாக சிலிண்டர் வெடி விபத்தில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் உடல் கருகி உயிரிழந்த, நிலையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் மர்ம பொருளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தனிப்படை தீவிர விசாரணை
அதன் அடிப்படையில் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா ,முகமது அசாருதீன், ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் இவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் போலீசாரையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இலங்கை தாக்குதல்
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைதானவர்களை கோவையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சந்தித்ததாக வெளியான தகவல் தான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெரோஸ் தற்போது கேரளா சிறையில் உள்ள ரசித் அலி, முஹம்மது அசாருதீன் ஆகியோரை சந்தித்தது தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சிறையில் சந்திப்பு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரோஸ், முகமது அசாருதீன் மற்றும் ரஷீத் அலியை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின் நோக்கம் என்ன வேறு ஏதேனும் சதித் திட்டத்தில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டு இருந்தார்களா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த பின்னணி வெளியாகி இருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications