இத்தனை பேரா? நீ சென்னா கேட்க மாட்ட! ஹாஸ்பிட்டலில் நீண்ட கத்தி! துடிதுடித்து மாண்ட நான்சி! ஷாக் கோவை!
கோவை : கோவையில் மருத்துவமனை வளாகத்தில் செவியிலியர் பணியில் இருந்த மனைவியை கணவனே கொடூரமான முறையில் பலபேர் முன்னிலையில் கொலை செய்திருக்கும் சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை கணவர் கத்தியால் குத்திக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர்.
கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த வினோத். இவரது மனைவி நான்சி. நான்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

செவியிலியர்
இவர்களுக்கு திருமணமாக பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நான்சி செவிலியர் பணி செய்து வருவதால் அடிக்கடி இரவு பணிக்குச் செல்வது வழக்கம். பல நாட்கள் கடும் பணி சூழல் காரணமாக இரவு தாமதமாக வருவது, விடுமுறையே எடுக்காமல் பணிக்குச் செல்வது என இருந்திருக்கிறார் நான்சி. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் பலருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு சண்டையிட்டிருக்கிறார்.

கொடூர கொலை
இதனிடையே இன்று காலை நான்சி வழக்கம் போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றார். அவரை அவரது கணவர் வினோத் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதனிடையே மருத்துவமனை வளாகத்திற்குள்ளே வைத்து தான் கொண்டு வந்த கத்தியால் நான்சியை சரமாரியாக வெட்டியுள்ளார். பரபரப்பு மிகுந்த மருத்துவமனையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் தலைதெறிக்க ஓடினர். அதே நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவன் வெறிச்செயல்
சிலர் வினோத்தை பிடிக்க முயன்ற நிலையில் கையில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை குறித்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில், மனைவியை சரமாரியாக குத்திய நிலையில், வினோத்திற்கு கையில் காயம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் நான்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வினோத்தை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications