"அண்ணாமலை தேசபக்தி வாட்ச்.." வானதியிடம் வந்து விழுந்த கேள்வி.. சொன்ன பதில் என்ன தெரியுமா?
கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருந்த வாட்ச் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய வனதி சீனிவாசன், நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கும் போது இதையெல்லாம் விவாத பொருளாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டியிருந்த வாட்ச் தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. ரபேல் எனும் அந்த வாட்சின் விலை ரூ.3.50 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த வாட்ச் ரபேல் விமானத்தின் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் தொடர்பாக வழக்கம்போல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் உருவானது.

கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி
இந்த நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது.. இது குறித்து எல்லாம் விவாதிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:- கோவை மாநகரம் முழுவதும் சாலைகளின் நிலைமை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அதிகமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய பகுதிகளில் கூட சாலைகள் மோசமாக உள்ளது.

மழைக்கு கூட தாங்காத மாதிரி சாலைகள்
தண்ணீர் பந்தலில் இருந்து சேரன் மாநகர் வரைக்கும் 2 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை இந்த மழைக்குப் பிறகு குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இவர்கள் கொடுக்கும் திட்ட மதிப்பீட்டின் படிதான் சாலைகள் போடுகிறார்களா அல்லது ஒரு மழைக்கு கூட தாங்காத மாதிரி சாலைகள் பொடுகிறார்களா என்பது தெரியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது வந்தாலும் சாலைகள் போடுகிறோம் என்று வாய்வார்த்தையாக சொல்கிறார். ஆனால் உண்மையில் களத்தில் சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளது.

மகனை அமைச்சராக ஆக்கியதன் மூலம்
குப்பைகள் எடுக்கும் பணி முறையாக நடப்பதில்லை. சில இடங்களில் 5 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறார்கள். மாநிலத்தின் முதல்வர் தன்னுடைய அடுத்த வாரிசை அமைச்சராக அழகு பார்த்து இருக்கிறார். அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது. அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால் தன்னுடைய மகனை அமைச்சராக ஆக்கியதன் மூலம் குடும்பத்திற்கு உள்ளாக அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு முதல்வர் முயற்சிக்கிறார். திமுக இன்று குடும்பத்திற்கான கட்சியாக மாறி இருக்கிறது.

வித்தியாசம் தெரியாத அளவுக்கு
ஜனநாயக அரசியலில் குடும்பத்தை மையப்படுத்திய குடும்ப அரசியலுக்கு என்றுமே இடம் இருந்தது இல்லை. இளைஞர்களுக்கு, திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக இன்று இல்லை. ஒரு அமைச்சரவை கூட்டம் நடத்தினாலோ.,. முக்கியமான கூட்டம் நடத்தினாலோ... அந்த குடும்பத்தின் வரவேற்பு அறையில் நடத்துகிறார்களா... அல்லது அமைச்சரவை கூட்டம் நடத்துகிறார்களா.. என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு திமுகவில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

பாஜக நல்ல வாய்ப்புகளை கொடுக்கிறது
பாஜகவில் அப்படி இல்லை. எங்களுடைய தலைமை பொறுப்பு என்பது கூட குறிப்பிட்ட காலத்திற்கு தான். பாஜகவில் ஜனநாயக ரீதியாக அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். இந்த மாதிரி எந்த வாய்ப்புகளுமே இல்லாதது அவர்களுடைய கட்சிக்கு வேண்டும் என்றால் அவர்கள் நல்லதாக பார்க்கலாம். ஆனால், மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்சிக்கு குடும்ப அரசியல் பாதகம் தான் அதிகம் செய்யுமே தவிர சாதகமாக இருக்காது. அதனால், அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் பாஜக நல்ல வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறது" என்றார்.

மக்கள் பிரச்சினை ஆயிரம் உள்ளது
பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாட்ச் விவகரம் குறித்து கேள்வி எழுந்த போது பதிலளித்த வானதி சீனிவாசன், "தமிழகத்தில் மக்கள் பிரச்சினை ஆயிரம் உள்ளது. அதை விட்டுவிட்டு வாட்ச் பார்த்தீர்களா.. ஹேர்ஸ்டைல் பார்த்தீர்களா.. எந்த சலூனுக்கு போகிறார்... என இதையெல்லாம் பொது வெளியில் விவாத பொருளாக்கி இதில் நேரத்தை செலுத்த வேண்டுமா.. என யோசித்து பாருங்கள்" என்றார்.
-
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications