ஐஸ்கிரீம் பர்பி, குல்கந்து பிஸ்கட், பாதாம் ரோஸ் லட்டு.. தீபாவளிக்கு ஒரு புடி.. டிரெண்டிங் ஸ்வீட்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தீபாவளியை கூடுதல் தித்திப்பாக்கும் வகையில் ஸ்வீட்ஸ்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் வகைகள் புதிதாக வந்துள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் தான் முதலில் நினைவுக்கு வரும். அதிலும் முதலிடம் பிடிப்பதென்றால் ஸ்வீட்ஸ்களாகத்தான் இருக்கும். தீபாவளிக்கு ஒருவாரத்துக்கு முன்பே பலகாரங்களை செய்வதற்கான பிராசஸே ஒரே பரபரப்பாக இருக்கும். முறுக்கு, அதிரசம், லட்டு, மைசூர்பாகு, குலாப் ஜாமூன், ஓட்டு பக்கோடா, மிக்சர் போன்றவற்றை வீட்டில் செய்வதற்கு தனியாக ஒரு பர்சேஸே நடக்கும்.

diwali sweets

மிகவும் அவசரமாகவுள்ள இந்த காலகட்டத்தில் வீட்டில் பலகாரங்கள் செய்வது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. இதனால் வீடுகளில் இனிப்பு, காரங்களை செய்வதைத் தவிர்த்து தற்போது கடைகளில் அதிக அளவில் வாங்கத் தொடங்கி விட்டனர். வீடுகள் மட்டுமல்லாமல் தங்களது ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஸ்வீட்ஸ், கார பாக்ஸ்களையும் வாங்கி வருகின்றனர்.

மார்க்கெட்டுகளில் புதுப்புது வெரைட்டிகளில் இறங்கும் ஸ்வீட், காரங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. டிரெடிஷனல் பலகாரங்கள் முதல் தீபாவளி டிரெண்டிங் பலகாரங்கள் வரை என நூற்றுக்கணக்கான வெரைட்டிகளில் இனிப்புகள் ஸ்வீட் ஸ்டால்களில் குவிந்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இனிப்பு, கார வகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஸ்பெஷலாக என்னென்ன ஸ்வீட்ஸ்கள் வந்துள்ளன என்று கோவை, வடவள்ளி ஆனந்தாஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலர் கார்த்திக் நம்மிடம் கூறியதாவது: கீ ஸ்வீட்ஸ், பெங்காளி ஸ்வீட்ஸ், மில்க் ஸ்வீட்ஸ், ப்யூர் காஜூ, லக்னோ ஸ்வீட்ஸ் வெரைட்டிகள், பக்வலா ஐட்டம்ஸ் இந்த தீபாவளிக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. டிரெடிஷனலான வெரைட்டிகளுக்கு கிரேஸ் இருக்கும் அதே சமயம் இதுபோன்ற ஸ்வீட்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளன.

அந்த வகையில், பாதாம் ரோஸ் லட்டு, காஜூ பிஸ்தா லட்டு, டிரை ப்ரூட் லட்டு, குல்கந்து பிஸ்கட், வால்நட் பிஸ்கட், மேங்கோ பிஸ்கட், ப்ரீமியம் காஜூ கத்லி, காஜூ கஸாட்டா ரோல், காஜூ அன்ஜீர் ரோல், காஜூ பிஸ்தா ரோல், காஜூ மேங்கோ பிஸ்கட், முந்திரி ஹல்வா அமெரிக்கன் டிரை ப்ரூட், டிரை ப்ரூட் டேட்ஸ் லட்டு, காஜூ சாக்லேட் டிரை ப்ரூட் ரோல், டேட்ஸ் டிலைட் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கீ மைசூர்பாக், கேரட் மைசூர் பாக், காஜூ பிஸ்கட், கீ லட்டு, டேட்ஸ் லட்டு, ப்ரூட்ஸ் ஹல்வா, பனராஸ் சோன் பப்டி, முந்திரி கேக், ஹார்லிக்ஸ் பர்பி, ஆரஞ்சு ஐஸ்கிரீம் பர்பி, தோடா பர்பி, கீ மைசூர்பாக், டேட்ஸ் பர்பி, ஐஸ்கிரீம் பர்பி, தூத் பேடா, பாம்பே ஹல்வா, நாக்பூர் சோன் பப்டி, கிளாஸிக் மைசூர் பாக், வொய்ட் பாதுஷா, டேட்ஸ் ஹல்வா, கேசர் பர்பி, பூந்தி லட்டு, காஜூ சாக்லேட் டிரை ப்ரூட் ரோல், நாக்பூர் சோன் பப்டி, டேட்ஸ் ஹல்வா.

பாரம்பரியமான சாத்தூர் லட்டு, ஜாங்கிரி, கருப்பட்டி கோக்கனட் பர்பி, வொயிட் கோக்கனட் பர்பி, ரெட் பனானா மைசூர்பாக், கருப்பட்டி மைசூர்பாகு, கருப்பட்டி காஜூ கத்லி, கருப்பட்டி ஹல்வா. கார வகைகளில் முத்துச்சரம் முறுக்கு, ஸ்பெஷல் மிக்சர், அரும்பு முறுக்கு, கார்லிக் முறுக்கு, கார்ன் மிக்சர், டிரை ப்ரூட் மிக்சர், சாத்தூர் காரசேவு, நெல்லை காரசேவு என 140 க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் ஸ்லீட்ஸ்களும், 80 வெரைட்டிகளில் கார வகைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, இளநீர் அல்வாவுக்கு என்றுமே எப்போதுமே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தீபாவளிக்காக அல்வா வெரைட்டிகளில் கொதல் அல்வா, இளநீர் அல்வா, கோதுமை அல்வா, கேரட் அல்வா, திரட்டிப்பால் அல்வா, மில்க் அல்வா ஆகியவையும் இந்த தீபாவளிக்காக தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வெரைட்டிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாரம்பரிய ஸ்வீட்களை வாங்கும் அதே நேரத்தில் புது வெரைட்டிகளையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+