கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்
கோவை: ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இன்று (10.3.26) முதல் உணவு மெனு பட்டியலை குறைப்பதாக அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் கோவையில் மிகவும் பிரபலமானது. இவர்களுக்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிளைகள் செயல்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரியால் உணவுப் பொருட்கள் விற்பனையில் உள்ள சவால்களை, அன்னபூர்ணா உணவகத்தின் இயக்குநர் சீனிவாசன் பேசியது இந்தியா முழுவதும் வைரலானது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட இடைவிடாமல் இயங்கும் அன்னபூர்ணா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாக எல்பிஜி எரிவாயு விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் எல்பிஜி சமையல் எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

சேவையில் பாதிப்பு
இது எங்கள் சேவையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சேவையை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக மாற்று நடவடிக்கைகளை அமல்படுத்தப்படுகிறோம். அதன்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்து. அதற்கேற்ப ஹோட்டலின் உணவு மெனு பட்டியல் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்கள் கிடைக்கும் நேரங்களிலும் மாற்றம் இருக்கலாம்.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் அதிர்ச்சி
இந்த நடைமுறை இன்று (10.3.26) முதல் அமல்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசு மற்றும் விநியோகத்தர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். சூழ்நிலையை புரிந்து எப்போதும் போல ஆதரவு வழங்க வேண்டுகிறோம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications