கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் 99 சதவீதம் கிருமிகளை அழிக்க வல்ல புற ஊதா கதிர் கொண்ட ரேசர் சானிடைசரை இந்தியாவில் இளைஞர் ஒருவர் முதல்முறையாக உருவாக்கியுள்ளார்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிக்குமார் கந்தசாமி. இவர் தற்போது பாக்கெட் வடிவிலான u v ரேசர் சனிடைசர் இந்தியாவில் முதன்முறையாக தயாரித்துள்ளார்.

புற ஊதா கதிர்கள்

புற ஊதா கதிர்கள்

மேலும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நாம் இதனை லேப்டாப், செல்போன், பர்ஸ் மற்றும் கதவுகள் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம். அப்போது இது புற ஊதாக் கதிர்கள் மூலம் அந்தக் கிருமிகளை 99% அளிக்கவல்லது என்கிறார்.

கிருமிகள்

கிருமிகள்

மேலும் 40 வினாடிகளில் அந்த கிருமிகளை முழுமையாக அழித்து விடும். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த கருவியை 2000 எண்ணிக்கையில் இந்தியாவில் நாங்கள் விற்பனை செய்துள்ளோம்.

விளக்கம்

விளக்கம்

மேலும் 7 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். 14 நாடுகள் உடன் பேசி வருகிறோம். ஆறு மாத காலம் உபயோகப்படுத்தும் வகையில் மாஸ்க் ஒன்றை தயார் செய்துள்ளோம். இந்தக் கருவியை தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உபயோகப் படுத்துவது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய்

2000 ரூபாய்

தற்போது ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் விலை 2000 ரூபாய் ஆகும். கோவையில் மட்டும் 80 கல்வி நிறுவனங்கள் இந்தக் கருவியை வாங்க திட்டமிட்டுள்ளன. மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் இந்த uv பேக்கட் சனிடைசர் ரேசரை வாங்கிப் பயன் பெற்று வருகிறார்கள் என்றார்.

English summary
Madurai youth creates UV Sanitiser which kills 99% bacteria. Its price is Rs 2000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X