17 பேரை பலிவாங்கிய 20 அடி கருங்கல் சுற்றுச்சுவர்.. முழுமையாக நீக்க மக்கள் கோரிக்கை
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் அந்த சுற்றுச்சுவரை முழுவதுமாக நீக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.

இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இந்த சுற்றுச்சுவரை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!