அமித்ஷா கொடுத்த வேலை.. கோவையில் ஓபிஎஸ் - அண்ணாமலை சந்திப்பு.. என்ன நடந்தது?
கோவை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்னதாக டெல்லியில் அமித்ஷாவை சென்று சந்தித்திருந்தனர். தற்போது கோவையில் அதிமுக மாவட்டச் செயலாளர் மோகன் ராஜ் இல்ல விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதனால் பல்வேறு விவாதங்கள் தொடங்கி இருக்கின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின் முக்கிய முடிவு ஒன்றை அறிவிக்கப் போவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதேபோல் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவை, அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகமாக மாற்றுவதாகவும் அறிவித்தார். இதனால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பெயரில் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றார். 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்தமாக கூறினார். அதேபோல் தனிக்கட்சி தொடங்கப் போவதாக நான் சொல்லவே இல்லை என்றும் யூடர்ன் போட்டார்.
இதனால் ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் ஓபிஎஸ் டெல்லியில் இருந்து வந்தபின், உடனடியாக அண்ணாமலை டெல்லிக்கு சென்றார். இதன் காரணமாக திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது கூட அண்ணாமலை மதுரைக்கு வரவில்லை. அமித்ஷா உடனான சந்திப்பின் போது, அண்ணாமலை தமிழக சூழல் குறித்து பேசியதாக கூறப்பட்டது.
அதேபோல் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வரவும் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்துள்ளனர்.அதிமுக மாவட்டச் செயலாளர் மோகன் ராஜ் இல்ல விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் இருந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி சால்வை அணிவித்து மரியாதை அளித்தனர். இதன்பின் சில நிமிடங்கள் பேசிவிட்டு புறப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பு காரணமாக பல்வேறு விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.
-
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications