கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெண்களை இன்னும் இழிவுபடுத்துவார்கள்''.. தி.மு.க.வை வறுத்தெடுத்த மோடி!

Google Oneindia Tamil News

கோவை: திமுக- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள். என்று தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

தாராபுரம் உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்ட ம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முதல்வர், துணை முதல்வர், தமிழக பாஜக தலைவர் எல் .முருகன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றிவேல் வீரவேல்

வெற்றிவேல் வீரவேல்

இந்த கூட்டத்தில் வெற்றிவேல் வீர வேல் என்று உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தின் மிக பழமையான நகரத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் கலாசாரம் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது. தமிழகத்தின் பெருமைக்குரிய பழமையான பகுதி தாராபுரம் ஆகும். கலிங்கராயன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் ஆகியோரை கொடுத்த மண் இது. ஐ.நா.வில் தமிழ் மொழியில் பேசியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் புதிய சட்டசபை அமைய உள்ளது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்ற கோரிக்கையை வைத்து நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர், அம்மா ஜெயலலிதாவின் லட்சியத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறோம். தாராபுரம் பகுதி மக்கள் நீண்டகாலமாக ரயில் பாதை கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். மத்திய அரசு இந்த கோரிக்கைகளை உறுதியாக நிரைவேற்றப்படும்.

திமுக வாரிசு திட்டம்

திமுக வாரிசு திட்டம்

மருத்துவ கல்வி உள்ளிட்டவற்றை தாய்மொழி கல்வியில் கற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வளர்ச்சி மட்டும்தான் எங்கள் நோக்கம். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி வாரிசு முறையை பின்பற்றி

பெண்களை இழிவுபடுத்துகின்றனர்

பெண்களை இழிவுபடுத்துகின்றனர்

திமுக, காங்கிரஸ் ஏவிய 2 ஜி ஏவுகணை தமிழகப் பெண்களை இழிவுபடுத்துகின்றன. தமிழக முதல்வரின் தாயாரை திமுக நிர்வாகி இழிவுபடுத்தி பேசி இருக்கிறார். இவை அனைத்தையும் தமிழக மக்கள் மிக உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றனர். பெண்களை அவமதிக்கும் எந்த போக்கையும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தலைவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுக- காங்கிரஸ் கலாசாரமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நிலைமை மோசமாகும்

திமுக ஆட்சிக்கு வந்தால் நிலைமை மோசமாகும்

தி.மு.க.வை சேர்ந்த திண்டுக்கல் லியோனி பெண்களின் உடல் அமைப்பு குறித்து மிக கேவலமாக பேசி இருக்கிறார். லியோனி, உதயநிதி ஆகியோர் பெண்களை இழிவாக பேசுகின்றனர். ஆனால் இவர்கள் மீது திமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக, காங்., திரிணாமுல் காங். கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை ஆகும். கடவுளே! திமுக- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள். ஆட்சியை பிடிக்க எதிரணியை அவமானப்படுத்துவது பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது போன்ற வேலையில் திமுக இறங்கியுள்ளது.

மத்திய அரசின் பெண்களுக்கான திட்டம்

மத்திய அரசின் பெண்களுக்கான திட்டம்

பெண்களை அவமதிக்கும் திமுக, காங்கிரசால் பெண்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஆண்டாள், ஒளைவயார் ஆகியோரை முன்மாதிரியாக வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்வைக்கிறது. மத்திய அரசின் கீழ் வழங்கும் வீடுகள் பெண்களின் பெயர்களில் இருப்பதை நாங்கள் முயற்சிக்கிறோம். பெண்களின் கண்ணியத்தை காக்க நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிவறிகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதில் பெண் பயணிகளையே அதிகம் தேர்வு செய்கிறோம். கொங்கு பகுதி மக்கள் நாட்டுக்கு செல்வம் சேர்ப்பவர்கள். நாட்டுக்கு முன்னேற்றத்தை அளிப்பவர்கள். .

கொங்கு மக்கள் கருணை கொண்டவர்கள்

கொங்கு மக்கள் கருணை கொண்டவர்கள்

கொங்கு பகுதி தொழில் முனைவோர்கள், மக்கள் கருணை கொண்டவர்கள். உலகத்தரம் வாய்ந்த பொம்மைகளை தயாரிக்கும் மையமாக இந்த பகுதி மாற இருக்கிறது. சிறு குறு தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. சிறு குறு தொழில்கள் என்பதன் வரையறையை எளிதாக்கி இருக்கிறோம். சிறு குறு தொழில்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளோம். தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்:

திமுக ஆட்சியில் மின்வெட்டு

திமுக ஆட்சியில் மின்வெட்டு

ஆனால் திமுக, காங். ஊழல் கண்கள் தொழில் வளர்ச்சியை விரும்பாது. திமுக ஆட்சியில் மின்வெட்டால் இப்பகுதி தொழில்கள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ராணுவ கவசம் வட எல்லையில் நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மூலம் அதிக நன்மை கிடைக்கும்.

விவசாய சீர்திருத்தம்

விவசாய சீர்திருத்தம்

விவசாய துறையை நவீனப்படுத்த சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு சொட்டு நீரும் அதிக விளைச்சலை தர வேண்டும் என்பதுதான் எங்களின் தாரக மந்திரம். திருக்குறள் விவசாயிகளுக்கு மரியாதை தருகிறது. விவசாயிகள் சமூகத்துக்காக உழைக்கிறவர்கள் என்கிறது திருக்குறள். தமிழகத்தில் 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை விரிவாக படித்து பாருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
If the DMK-Congress comes to power, they will still humiliate women. That is what Prime Minister Modi said at a public meeting in Dharapuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X