கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் இங்க..என் BMW வெளில நிக்குது! சதுரங்க வேட்டை பாணியில் மோசடி! தொக்காய் தூக்கிய போலீஸ்! கோவை ஷாக்

Google Oneindia Tamil News

கோவை : சதுரங்க வேட்டை பட பாணியில் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில், நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்கள் மூன்று பேர் கைது செய்துள்ள போலீசார், இரண்டு பேரை தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் தனியார் விடுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை மூன்று பேர் உங்கள் கத்தி முனையில் கடத்தி சென்றதாக மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது

இதைப் பற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2 பிள்ளைகளை தவிக்கவிட்டு எஸ்கேப்பான ஒத்தரோசா! போலீஸ் கதவை தட்டிய கணவன்! காத்திருந்ததே ஒரு அதிர்ச்சி!2 பிள்ளைகளை தவிக்கவிட்டு எஸ்கேப்பான ஒத்தரோசா! போலீஸ் கதவை தட்டிய கணவன்! காத்திருந்ததே ஒரு அதிர்ச்சி!

 மாணவன் கடத்தல்

மாணவன் கடத்தல்

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். அதில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் கத்திமுனையில் கடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது, அந்த காட்சிகளின் அடிப்படையில் தனி படை போலீஸ் சார் அழகர் கோவில் மெயின் ரோட்டில் ஐந்து பேர் கும்பலை பிடித்துள்ளனர், இதில் சம்பவ இடத்தில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்..

 கிரிப்டோ கரன்சி

கிரிப்டோ கரன்சி

அவர்களிடமிருந்து அலங்காநல்லூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த அருணன் வயது 23 என்ற கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் அருணனிடம் விசாரணை நடத்திய போது கடந்தாண்டு கோவை கல்லூரியில் படித்த போது கிரிப்டோ கரன்சி வணிகம் பற்றி தனக்கு தெரியவந்ததும் இதில் நாற்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் 2000 வட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

நெருக்கடி

நெருக்கடி

இதனைப் பற்றி தன் நண்பரிடம் தெரிவித்ததாகவும் நண்பர்களோடு சேர்ந்து நானும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர்.. இந்நிலையில் முதலீடு செய்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூடப்பட்டுள்ளது என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கோவையில் கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பர்கள் உன்னை நம்பி தான் முதலீடு செய்தோம் எனவே நாங்கள் முதலீடு செய்த 36 லட்சத்தை நான்தான் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தனர்

மூவர் கைது

மூவர் கைது

இதற்கு நான் உடன்படாததால் என்னை கடத்தி சென்று செல்போனை பறித்து என்னை அடித்து துன்புறுத்தினார், என கூறினார். மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் 16 லட்சம் ரூபாய்க் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டது இது தொடர்பாக கல்லூரி மாணவரை கடத்தி அரவிந்த் குமார் சசிகுமார் கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இது தவிர தப்பி ஓடிய பிரசன்னா ஆனந்த் ஆகியோரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
While the police have arrested three friends who abducted a friend at knifepoint in like a film, the police are looking for two others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X