தயாராக இருந்த ‘ஹிட்லிஸ்ட்’! துப்பாக்கி பட பாணியில் துப்பு துலக்கிய போலீஸ்! கோவையின் ஸ்லீப்பர் செல்?
கோவை : கோவையில் கார் வெடித்த வழக்கில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரே நேரத்தில் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாருதி காரில் சிலிண்டர் வெடி விபத்தில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் மர்ம பொருளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது அதன் அடிப்படையில் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை கார் வெடி விபத்து
இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா ,முகமது அசாருதீன், ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து இவர்களை நேற்று மாலை ஜே.எம்2 நீதிபதி செந்தில்ராஜா முன்பு ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐவரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கபட்டனர்.

ஜமேஷா முபின்
இந்நிலையில் கோட்டைமேடு அருகே உள்ள ஜமேஷா முபினின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு சிறிய டைரியை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த டைரியில் இருந்த சில குறியீடுகளில் சுற்றுலா தலங்கள் என ஐந்து இடங்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை ரயில் நிலையம் , மாநகராட்சி விக்டோரியா ஹால், ரேஸ்கோர்ஸ், காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய ஐந்து இடங்கள் அந்த டைரியில் இடம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

5 இடங்களில் தாக்குதல்?
ஆனால் அவை சுற்றுலா தலங்கள் இல்லாத நிலையில் தினமும் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக கருதப்படுகிறது. எனவே அந்த ஐந்து இடங்களில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல இடங்களில் இருந்து வாங்கப்பட்ட வெடிபொருட்கள் முபினின் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு அங்கு வெடிப்பொருட்களுக்கான கலவையை தயார் செய்துள்ளதாகவும் அங்கு அதிக அளவில் ரசாயன வாசனை பரவியதால் அங்கிருந்து வேற இடத்திற்கு வெளி பொருட்களை மாற்றியதாக கூறப்படுகிறது.

ஸ்லீப்பர் செல்கள்?
போலீசார் சோதனை நடத்த சென்றபோது வீடு முழுவதும் ரசாயன வாசனை அதிக அளவில் இருந்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். வீட்டில் வைத்து வெடி பொருட்கள் தயாரிக்கும் அளவுக்கு முபினுக்கு பயிற்சி கொடுத்து உதவியாவர்கள் யார் எனவும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தயார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முபின் போன்று சிலிண்டர் நிரப்பப்பட்ட கார்களை இயக்கி தாக்குதல் நடத்த தயாராக வேறு யாரும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications