எடப்பாடி கூட்டத்தில் கோவை அதிமுகவினருக்கு காத்திருந்த ஷாக்.. 3 பேரிடம் 2 லட்சம் பிக் பாக்கெட்!
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பங்கேற்ற கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மூவரிடம் ரூ. 2 லட்சம் பணம் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்திற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி தங்கராஜின் ரூ.1 லட்சம், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு மேட்டுப்பாளையம் போலீசார் வலை வீசி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதன்படி, அதிமுகவும் தனது தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப் பயணத்தை இன்று கோவையில் தொடங்கினார். அதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு வந்து மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் என்பவர் பேன்ட் பாக்கெட்டை பிளேடால் அறுத்த மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.
அதேபோல், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ. 2,500 பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்திற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி தங்கராஜின் ரூ.1 லட்சம், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்த் உள்ளிட்டோரிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு மேட்டுப்பாளையம் போலீசார் வலை வீசி வருகின்றனர்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications