சபரிமலை சீசன்..ஆந்திரா, தெலுங்கானா ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. கோவை வழியாக ஸ்பெஷல் ரயில்கள்
கோவை: சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விடுவார்கள். சாமியே..சரணம் ஐயப்பா என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்கும். காலை மாலை இரண்டு வேளை குளித்து விட்டு பய பக்தியோடு கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள்.
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா
மாநிலங்களில் இருந்து பல வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் மாலை அணிந்து வருவார்கள். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. அதே போல ரயில்வே துறையும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில்
இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில் எண்: 07125 நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு ரயில்
கோட்டயத்தில் இருந்து நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் எண்: 07126 நவம்பா் 23, 30 ஆகிய தேதிகளில் காலை 4 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா், நால்கொண்டா, சேரலப்பள்ளி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கொல்லம் - செகந்தராபாத் சபரிமலை
கொல்லத்தில் இருந்து நவம்பா் 22, டிசம்பா் 6, 20, ஜனவரி 10 ஆகிய தேதிகளில் காலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சபரிமலை விரைவு ரயில் எண்: 07118 நவம்பா் 23, டிசம்பா் 7, 21, ஜனவரி 11 ஆகிய தேதிகளில் காலை 9.05 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவம்பா் 29, டிசம்பா் 13, 27, ஜனவரி 3, 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சபரிமலை விரைவு ரயில் எண்: 07122 நவம்பா் 30, டிசம்பா் 14, 28, ஜனவரி 4,18 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு செகந்தராபாதைச் சென்றடையும்.

செகந்தராபாத் - கொல்லம் சபரிமலை
செகந்தராபாதில் இருந்து நவம்பா் 27, டிசம்பா் 11, 25, ஜனவரி 1,15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கொல்லம் சபரிமலை விரைவு ரயில் எண்: 07121 நவம்பா் 28, டிசம்பா் 12, 26, ஜனவரி 2,16 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். செகந்தராபாதில் இருந்து நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில் எண்: 07123 நவம்பா் 22, 29 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

சிறப்பு ரயில்கள்
கொல்லத்தில் இருந்து நவம்பா் 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் எண்: 07130 நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 12.30 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவம்பா் 23, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் எண்: 07124 நவம்பா் 24, டிசம்பா் 1 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.

நிற்கும் ஸ்டேஷன்கள்
இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூா், திருவல்லா, செங்கன்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ராசம்பேட்டா, கமலாபுரம், கொண்டாபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications