கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியாராக வாழ்வது மிகவும் கஷ்டம்.. கேரளாவுக்கு வேலைக்கு போக எதுக்கு இந்தி?.. சத்யராஜ்

Google Oneindia Tamil News

கோவை: பெரியாராக நடிப்பதே கஷ்டம், அவரை போல் வாழ்வது என்பது அதைவிட பெரிய கஷ்டம் என நடிகர் சத்யராஜ் ஒரு விழாவில் பேசியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" புத்தக அறிமுக விழா நடைபெற்றது.

இதில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கௌதமன் , எழுத்தாளர் பாமரன், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஸ்டாலினும், பினராயி விஜயனும் யார் சிறந்த முதல்வர் என்று போட்டி போடுகிறார்கள்: சத்யராஜ் பேச்சு ஸ்டாலினும், பினராயி விஜயனும் யார் சிறந்த முதல்வர் என்று போட்டி போடுகிறார்கள்: சத்யராஜ் பேச்சு

சத்யராஜ் பேச்சு

சத்யராஜ் பேச்சு

இந்த புத்தக அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில் புரட்சி தமிழன் என்ற அடைமொழி எனக்கு பொருத்தமில்லை. நான் ஒரு புரட்சியும் செய்யவில்லை. இனமுரசு சத்யராஜ் என்கிறார்கள். திராவிட மாடலுக்கு துணையாக நிற்பவன் என்பதால் இனமுரசு என்பது சரியாக இருக்கும்.

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் என்பதில் இருந்துதான் கடவுள் மறுப்பை பெரியார் பேசுகிறார். பெரியாரா நடிப்பதே கஷ்டமாக இருந்தது. பெரியாராக இருப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும். பெரியார் பட சூட்டிங்கின் போது முட்டையையும் அழுகிய தக்காளியையும் என் முகத்தில் வீசினார்கள்.

 10 நாள் ஆச்சு

10 நாள் ஆச்சு

அந்த வாசனை போவதற்கே 10 நாள் ஆனது. ஆனால் பெரியார் இவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு மனிதநேயத்துடன் உழைத்துள்ளார். மொழி எது வேண்டுமோ அதை படித்துக் கொள்ளலாம். ஆனால் கேரளாவில் வேலைக்கு போக எதுக்கு இந்தி படிக்கணும்.

பெரிய வேலை

பெரிய வேலை

பெரிய வேலையில் இருந்தாலும் மூட நம்பிக்கைகள் பல்வேறு பெயர்களில் உள்ளே புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். மனத்திற்கு குடைச்சல் கொடுக்கும் மனவிலங்கை உடைக்கும் ஒரே ஆயுதம் பெரியார் சிந்தனைகள்தான் என சத்யராஜ் பேசியிருந்தார்.

English summary
Actor Sathyaraj says that it is difficult to live as Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X