முறைகேடு நடந்தால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவோம்.. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆவேசம்
கோவை : வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்தால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவோம் என கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்திடவும், முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கிணத்துக்கடவு தமோதரன், கவுண்டம்பாளையம் அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ஜூனன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் பந்தயசாலையில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரி நாகராஜன் -யிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

எஸ்.பி.வேலுமணி மனு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, " கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்திராத பிரச்சினை கலவரம் கரூர், சென்னை குண்டர்கள் வைத்து நிகழ்ந்து இருக்கின்றது எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தினம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். தேர்தலில் கலவரத்தை உண்டு பண்ணி பணம், பொருட்கள் கொடுத்தை கண்டித்து போராட்டம் நடத்தினோம். 9 பேர் மீதும் வழக்கு போட்டார்கள் மேலும் ஒவ்வொரு வார்டிலும் கரூர், சென்னை ரவுடிகள் இருந்து பண விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு வைத்தார். பின்னர் மாவட்டத்தில் மோசமான சூழ்நிலையை உருவக்கினர். இது தொடர்பாக ஆட்சியர், சிறப்பு தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்தோம் என்றார்.

அதிகாரிகளுக்கு மிரட்டல்
மேலும் அதிகாரிகளை மிரட்டி திமுக தோற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கபடுகின்றனர் என தகவல்கள் வந்துள்ளதாகவும் முதல்வர் அலுவலகத்தில இருந்தே பேசுகின்றனர் எனவும் மோசமான ஜனநாயக படுகொலை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்க வில்லை எனவும் இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மனு அளிக்கபட்டது. மேலும் முதல்வரின் மகன் உதயநிதி கடைசி நாள் பிரச்சாரத்தில் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். ஊழலை பற்றி பேசும் தகுதி உதயநிதிக்கு கிடையாது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி குடும்பமே ஊழல் இருந்து வந்தது எனவும் தாத்தாவில் இருந்து இப்போது வரை அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள் என்றார். உதயநிதி பிறந்தது முதல் ஊழலில் இருந்து வந்தவர் எனவும் சாவுமணி அடிப்பேன் என்ற வார்த்தையை உதயநிதி சொல்லி இருக்கின்றார் அதை முதல்வர் மகன் இப்படி ஒரு மோசமான வார்த்தையை பேசி இருக்கின்றார். ஆனால் முதல்வர் இந்த விவகாரத்தில் மகனை கண்டிக்க வில்லை. முதல்வருக்கும், உதயநிதிக்கும், இங்கு இருக்கும் அமைச்சருக்கும், கலவரம் செய்தாவது திமுகவை ஜெயிக்க வைக்க பார்க்கின்றனர் என தெரிவித்தார். நீதிமன்றம் இதை பார்த்து கொண்டு இருக்கின்றது.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவோம்
நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம் எனவும் வாக்கு எண்ணிக்கை சரியாக நடவில்லை என்றால் இந்த பிரச்சனை விடமாட்டம் எனவும் முறையாக நடக்கவில்லை என்றால் தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்தார். மேலும் எங்கள் போராட்டம் அரசியல் நடகமா ? கரூர், சென்னையில் குண்டர்கள் இருந்தார்களா என்பது மக்களுக்கு தெரியும், மக்கள் நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள் எனவும் இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், செயலாளருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
-
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications