கோவை மாணவன் கொலை.. கல்லூரி நிர்வாகங்களுக்கு பறந்த உத்தரவு.. போலீஸ் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போதை பொருள் கும்பல் குறித்து புகார் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். அவர் வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. கோவை தனியார் கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதே கசப்பான உண்மை. கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பின்பற்ற கோவை காவல்துறை கூறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 128 கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் கொடிசியா வளாகத்தில் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை செய்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யா பாரதி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Coimbatore Murder

சமூகவலைதளங்கள் கண்காணிக்கணும்

இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்களுக்கு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கல்வி நிறுவனங்கள் மற்றும் வளாகங்களில் மாணவர்களின் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்லூரி முதல்வர் உடன் இணைந்து நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அனைத்து கல்லூரி நிறுவனங்களிலும் சைபர் பிரிவு தொடங்கி மாணவர்களின் சமூக வலைதள நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களின் குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரி நிறுவனங்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் வாரத்தில் எஸ்.பி, டி.சி.பி தலைமையில் ஆய்வு நடத்த வேண்டும். அனைத்து கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் போதுமான சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில் முறையாக கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோருக்கு தகவல்

கல்லூரி நிர்வாகங்களின் பறக்கும் படை மாணவர்கள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் திடீர் சோதனைகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கல்லூரி நிறுவனத்திலும் ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்படுத்த வேண்டும். விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையை கண்காணித்து மாணவர்களின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். மனநல ஆலோசகர்களைக் கொண்டு அவ்வப்போது மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மாணவர்களை குழுக்களாக கண்காணித்து அவர்களுக்கென தனி மென்டார்களை நியமிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம், சைபர் கிரைம் குற்றங்கள், சமூக வலைதள சண்டைகள் , போதை பொருள் நடவடிக்கைகள் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுகின்றனரா என முறையாக கண்காணித்து மாதாந்திர காவல்துறை கல்லூரி நிர்வாக கூட்டத்தின் போது தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் படிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+