உடல் முழுவதும் ஓட்டை..ஜமேஷா முபின் மார்பை துளைத்த 2 இன்ச் ஆணி! கோவை கார் வெடிப்பு திட்டமிட்டது தானா?
கோவை : கோவை கார் குண்டுவெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியாகி உள்ள தகவல்கள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர் தாக்குதலுக்கு திட்டமிட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, எடிஜிபி தாமரைன் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

ஜமேஷா முபின்
விபத்து தொடர்பாக சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். காரில் எரிந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள் கோலிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

வலுவான ஆதாரம்
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை அடுத்து என்ஐஏ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஜமேஷா முபின் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

ஜமேஷா முபின்
இதற்கிடையே ஜமேஷா முபினின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவால் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஜமேஷா முபினின் உடல் முழுவதும் சுமார் இரண்டு இன்ச் நீளம் உள்ள ஏராளமான ஆணிகள் துளைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆணி இடது பக்கம் மார்பிலும் மற்றொரு ஆணி முபினின் இதயத்திலும் துளைத்திருக்கிறது. இதன் காரணமாக இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முபின் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்
மேலும் அந்த விபத்தில் கார் வெடித்து சிதறிய போது முபினின் உடல் முழுவதுமாக கருகாமல் இருந்திருக்கிறது. இதன் மூலமாக காரை வெடிக்கச் செய்துவிட்டு ஜமேஷா முபின் அங்கிருந்து தப்பிக்க முயன்று இருக்கலாம் எனவும், ஆனால் காரில் இருந்த ஆணிகள் சிதறி அவர் உடலையும் மார்பையும் துளைத்ததில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்டு தாக்குதலுக்கு தயாரானதாகவும் அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications