லிவிங் டூ கெதர்.. நம்பிக்கை துரோகம்.. கடுங்கோபம்.. காதலன் மீது ஆசிட் வீசிய காதலி.. எங்க தெரியுமா?
கோவை: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராக்கேஷ். துபாயில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். அப்போது இவருக்கும் துபாயில் பணிபுரிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் நட்பாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே துபாயில் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

ரூ.18 லட்சம் பணம்
இருவரும் இந்தியாவுக்கு திரும்பி திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இணைந்து தொழில் செய்யவும் திட்டமிட்டிருந்தனர். இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பிய இருவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். ராகேஷை திருமணம் செய்து கொள்ள ரூ.18 லட்சம் பணம் ஜெயந்தி கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்
இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ராகேஷூக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இது பற்றி தெரியவந்ததும் ஜெயந்தி அதிர்ச்சி அடைந்தார். இதக்கிடையே நேற்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் ஒன்றிக்கு திருமணம் தொடர்பாக பேச வேண்டும் என ராகேஷ் அழைத்துள்ளார். ஜெயந்தியும் அங்கு வந்துள்ளார்.

ஆசிட் வீசினார்
தன்னை ஏமாற்றி விட்ட கோபத்தில் ஜெயந்தி ராகேஷிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வேளையில் ஜெயந்தியின் கைப்பேசியை வாங்கிய ராகேஷ் அதிலிருந்த புகைப்படம் உள்ளிட்ட தடயங்களை அழித்ததாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் ஜெயந்தி தான் வைத்திருந்த ஆசிட்டை ராகேஷ் மீது ஊற்றியுள்ளார். இதில் ராகேஷூக்கு கண் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அருகிலிருந்த கத்தியை எடுத்தும் ராகேஷின் கையில்குத்தியுள்ளார்.

தற்கொலைக்கு முயற்சி
இதில் ராகேஷுன் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயந்தியும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த அபார்ட்மென்ட் காவலாளி இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக பீளமேடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஜெயந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 323,324,326(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகேஷ் மீது 417,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications