கோவைக்கு குட் நியூஸ்! தமிழகத்தின் நீளமான மேம்பாலம் திறக்கப்பட்டது.. பயண நேரம் 10 நிமிடமாக குறையும்
கோவை: கோவையின் புதிய அடையாளமாக மாறியுள்ள ஜி.டி.நாயுடு பெயரிடப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதனால் கோவை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல முன்பு 45 நிமிட பயணம் அமையும். ஆனால் இனி 10 நிமிடங்களாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலம்
கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. நாட்டிலேயே 3வது மிக நீளமான மேம்பாலமாக இது அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை - நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிமீ தூரத்திற்கு உள்ள நிலையில், இது அதைவிட பெரியதாக 10.1 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்படுகிறது
தமிழ்நாட்டிலேயே மிக நீளமான இந்த உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை - அவினாசி ரோடு மேம்பாலத்தினை, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளிவில் கோல்டு வின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காரில் பயணித்தபடி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கையசைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவையொட்டி நேற்று இரவு மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்வதற்கான 45 நிமிட பயணம் 10 நிமிடமாக குறையும். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
என்னென்ன வசதிகள் உள்ளன
* 4 வழித்தட உயர்மட்ட மேம்பாலமாகவும், 6 வழித்தடத்துடன் கூடிய விரிவுப்படுத்தப்பட்ட தரைவழிச்சாலையாகவும், மொத்தம் 10 வழித்தடங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
* இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம், நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும்.
* தமிழ்நாட்டில் முதல் முறையாக, பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் மேம்பாலத்தில் செய்யப்பட்டுள்ளன.
* தற்போது கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்ல சுமார் 10 கிமீ தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. ஆனால் இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், 10 நிமிடங்களில் செல்ல முடியும்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணா சிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
சுமார் 4.90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்த மேம்பால கட்டுமான பணியானது நடைப்பெற்றது. மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பணி முன்னெடுக்கப்பட்டது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications