கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்கிட்ட மோதாதீங்க! கெத்தாக பேசிய டிடிஎஃப் வாசனை கொத்தாக தூக்கிய போலீஸ்! உடனடியாக நடந்த ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

கோவை : சமூக வலைதள பிரபலமான ஜிபி முத்துவுடன் அதிவேகமாக பயணம் செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல யூட்யூபரான இடிஎப் வாசன் பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் கோவை சூலூர் போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் 243 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இதையடுத்து பலரும் அவரை சூப்பர் மேன் என கொண்டாடி வந்தனர்.

அதே நேரத்தில் அவரது செயல் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. இளைஞர்களை டிடிஎஃப் வாசன் தவறாக வழிநடத்துவதாகவும், இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

ஒருவழியாக இந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், வேலியில் போன ஓணான் கதையாக ஜிபி முத்துவுடன் ரைட் போன வாசனுக்கு வாசல் வழியாக சிக்கல் வந்தது. பிரபல யூட்யூப் பிரபலமும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தோன்றி நடித்து வரும் ஜிபி முத்துவுடன் டிடிஎஃப் வாசன் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எதிர் திசையில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கிடையே மின்னல் வேகத்தில் டிடிஎஃப் வாசல் பைக் ஓட்டியதோடு கைகளை விட்டு சாகசம் செய்திருக்கிறார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த நிலையில், "அலறிய ஜிபி முத்து தெறிக்க விட்ட டிடிஎஃப் வாசன்" என சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டுமென சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுதின இதனைத் தொடர்ந்து டிடிஎஃப் வாசல்ன் மீது போத்தனூர் மற்றும் சூழல் காவல் நிலையங்களில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த இடத்தில் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் சரணடைந்தார்.

 அதிரடி கைது

அதிரடி கைது

காலை 10:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரை நீதிமன்ற கூண்டில் அமர வைக்கப்பட்ட வாசன் பிறகு இரண்டு நபர்களின் ஜாமினை எடுத்து மாலையில் விடுவிக்கப்பட்டார் இந்த நிலையில் போத்தனூர் வழக்கில் அவர் சரணடைந்த நிலையில் சூலூர் காவல் நிலைய வழக்கில் டிடிஎஃப் வாசன் வெள்ளிக்கிழமை ஆஜராக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் விதமாக பைக்கை ஓட்டிய வழக்கில் TTF வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ஜாமீனில் விடுதலை

ஜாமீனில் விடுதலை

பெங்களூர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் வாசனை சூலூர் போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்குப் பதிவு நடைமுறைகள் நிறைவடைந்தது. இந்நிலையில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக பைக்கை ஓட்டிய வழக்கில் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் காவல் நிலைய பிணையில் போலீசாராலேயே விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சைகளுக்கிடையே என்கிட்ட மோத வேண்டாம் என டிடிஎஃப் பேசி கெத்தாக வீடியோ வெளியிட்ட நிலையில், கொத்தாக போலீசார் தூக்கியிருப்பதாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

English summary
It has been reported that TTF Vasan, a famous YouTuber who was involved in a controversy after traveling at high speed with social media celebrity GP Muthu, was arrested by the Coimbatore Sulur police while he was trying to escape to Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X