சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் எங்கே? மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடிக்கும் பிரதமர் மோடி.. கனிமொழி

Subscribe to Oneindia Tamil

கோவை: சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்காமல் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என திமுக வேட்பாளர் கனிமொழி விமர்சித்திருந்தார்.

கோவையில் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Tuticorin DMK Candidate Kanimozhi criticises PM Modi in her campaign

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் நெகமம் பகுதியில், சின்ன நெகமம் திடலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, ஆயிரக்கணக்கான மக்களை மத்தியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி: தமிழ்நாட்டு மக்களுக்கு யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் வரக்கூடாது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜக என்ன செய்தாலும், தமிழ்நாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியாது, நாடும் நமதே, நாற்பதும் நமதே.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர் அண்ணாமலை 60 சதவீத வாக்குகள் பெறுவர் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார், அவர் காணும் கனவில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வெற்றி இல்லை, என்றுமே தமிழ்நாடு பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காத பிரதமர், தேர்தல் என்றவுடன் அடிக்கடி வந்துள்ளார்.

தேர்தல் பத்திரம் பாஜகவிற்காக வாங்கினால் உடனடியாக அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் அகற்றப்படும். நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதற்காக நுழைவுத் தேர்வில் கொண்டு வந்தது ஒன்றிய அரசு, ஒன்றியத்தில் நாம் ஆட்சி அமையும் பொழுது, மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும், கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்.

Tuticorin DMK Candidate Kanimozhi criticises PM Modi in her campaign

இரண்டு தொலைப்பேசி எண்களை வைத்து, ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டத்தில் போலி கணக்குகள் உருவாக்கி ஊழல் செய்துள்ளது பாஜக, மேலும் மக்களின் அத்தியாவசிய தேவையான சுகாதாரத் துறையில் காப்பீடு திட்டத்தின் மூலம் ஊழல் செய்துள்ளதை ஒன்றிய அரசின் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்குவதாகக் கூறும் பிரதமர் இதுவரை மானியம் வழங்கியுள்ளாரா, அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் பொழுது 410 ஆக இருந்த சமையல் எரிவாயுவின் விலை தற்போது ஆயிரத்திற்கும் மேலே சென்று விட்டது. நமது வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+