கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்தான் பேசிகிட்டு இருக்கார்ல.. சீறிய அண்ணாமலை.. பற்ற வைத்த கார்த்தி சிதம்பரம்.. "இது" வேற நடந்ததா?

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று கார்த்தி சிதம்பரம் பேட்டி அளிக்கும் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று சென்னையில் இருந்து பணி நிமித்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் வந்தார். இதே விமானத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் பயணம் செய்தார்.

இதையடுத்து அண்ணாமலை கார்த்தி சிதம்பரத்துடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.

அண்ணாமலை இதில் சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

சனாதன புத்தியின் எச்சம்! பிடிஆருக்காக பாய்ந்து வந்த திருமாவளவன்! அண்ணாமலை மீது விளாசல்! கடும் தாக்குசனாதன புத்தியின் எச்சம்! பிடிஆருக்காக பாய்ந்து வந்த திருமாவளவன்! அண்ணாமலை மீது விளாசல்! கடும் தாக்கு

விமான நிலையம்

விமான நிலையம்

இந்த நிலையில்தான் விமான நிலையத்தில் நடந்த வேறு ஒரு சம்பவம் இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. விமான நிலையம் வெளியே கார்த்தி சிதம்பரம் பேட்டி கொடுத்தார். அப்போது அண்ணாமலை வந்ததும்.. வருங்கால தமிழ்நாடே வருக.. பாரத் மாதா கீ ஜே என்று பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இந்த சத்தத்தால் சரியாக பேட்டி கொடுக்க முடியாமல் திணறிய கார்த்தி சிதம்பரம்.. அவங்க எதோ புரியாத மொழியில் பேசுகிறார்கள் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 கோஷம்

கோஷம்

தொடர்ந்து பாஜகவினர் அண்ணாமலையை வரவேற்று கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் கார்த்தி சிதம்பரம் பேச முடியாமல் நிறுத்தினார். அவங்க புரியாத மொழியில் கோஷம் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், நமக்கு என்ன என்று கூறினார். இதையடுத்து அங்கு வந்த அண்ணாமலை.. எம்பி கார்த்திதான் பேட்டி கொண்டு இருக்கிறாரே அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் அண்ணாமலை காட்டமாக சொல்லியும் கேட்காமல் பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இதையடுத்து தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் உள்ளது. ஆளும் கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தில் எங்களுக்கு இடம் இல்லை. ஆனால் ஆளும் கட்சியோடு நாங்கள் ஒத்துப்போக வேண்டும். ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். அதன் மூலம்தான் வென்று இருக்கிறாராம்.

அரசாங்கம்

அரசாங்கம்

நாங்கள் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை. ஆளும் கட்சியில் அரசு நிர்வாகத்தில் நாங்கள் இல்லை. நாங்கள் எதிர்கட்சியாகவும் இல்லை. அதனால் நாங்கள் ஒரு நடுவில் சிக்கி இருக்கிறோம். அந்த நிலையில் இருக்கும் போது எங்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடமான நிலை இருக்கிறது. காமராஜர் போல ஒருவர் தோன்ற வேண்டும். அப்போதுதான் காமராஜர் ஆட்சி அமைய முடியும். அப்படி இதுவரை அமையவில்லை.

ஆட்சி

ஆட்சி

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும். எல்லா ஊரிலும் மக்கள் பிரச்சனை இருக்கும். அதை பேச வேண்டும். ஆனால் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் அதை பற்றி பேச முடிவது இல்லை. சுதந்திரமாக பேச முடிவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

பற்றவைத்த கார்த்தி

பற்றவைத்த கார்த்தி

என்னை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக செயல்படுகிறார். மக்கள் வெளிப்படையாக அணுக கூடிய தலைவராக இருக்கிறார். அதனால் அவரை நான் பாராட்டுகிறேன், என்று கூறினார். அண்ணாமலையுடன் செல்பி எடுத்த கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டிலும் பிரச்சனைகள் இருக்கிறது, கூட்டணி கட்சி என்பதால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
What did happen between MP Karthi P Chidambaram and Annamalai in Coimbatore?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X