ஒரு தோழியின் தாத்தா.! இன்னொரு தோழியின் அப்பா! கோவை மாணவி தற்கொலையில் மறைக்கப்படும் உண்மை?
கோவை: ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை எற்படுத்தியுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

உருக்கமான கடிதம்
பள்ளியில் இருந்து விலகிய பின்பும் காமக்கொடூர ஆசிரியர் மாணவியை விடாமல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். நேற்று இரவு போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ''யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தா ஓட தாத்தா. எலிசா சாரு ஓட அப்பா. இந்த சார் ***** (கெட்ட வார்த்தை). யாரையும் விடக் கூடாது'' என்று கூறி இருந்தார்.

யார் அந்த 2 பேர்?
இந்த நிலையில் மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற 2 பேர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சார் என்று மாணவி குறிப்பிட்டு இருப்பது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் மாணவி கடிதத்தில் கூறியுள்ள மற்ற இரண்டு பேர் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர். ஆனால் மாணவியின் உறவினர்கள் வேறு மாதிரி கூறுகின்றனர்.

சிறு வயதில் பாலியல் தொல்லை?
''மாணவி 6-ம் வகுப்பு படிக்கும்போது அவரது தோழிகளின் தந்தை மற்றும் தாத்தா மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கலாம்''. இதனால் இந்த பழைய கொடுமையும் மனைவி மனதில் வடுவாக பதிந்து இப்போது இந்த பெயர்களை எழுதி இருக்கலாம்'' என்று சொல்கின்றனர் உறவினர்கள். ''அந்த சம்பவத்துக்கு பிறகு மாணவிக்கு ஆண்களை பார்த்தாலே பிடிக்கவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர் ஒருமுறை கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்'' என்றும் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளனர் மாணவியின் உறவினர்களும், நண்பர்களும்.

மாணவியின் கையெழுத்துதானா?
அதே வேளையில் கடிதத்தில் கெட்ட வார்த்தை இடம் பெற்று இருப்பதால் அதனை கண்டிப்பாக மாணவி எழுதி இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். போலீசாரின் எப்.ஐ.ஆரில் கூட மாணவியின் கடிதம் குறித்து ஏதும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்துதானா? என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இன்னும் ஆழமாக விசாரணை மேற்கொள்ளும்போதுதான் இந்த கடிதம் தொடர்பான முழு தகவலும் கிடைக்கும்.

பள்ளி முதல்வர் மீது போக்ஸோ
இதற்கிடையே மாணவியும், மாணவியின் பெற்றோர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் காமக்கொடூர ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படையினர் முதல்வர் மீரா ஜாக்சனை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications