பைக்கை "சீஸ்" பண்ணுவோம்.. டிடிஎப் வாசன் இளைஞர்களை கெடுக்கிறார்.. விட மாட்டோம்.. கமிஷ்னர் வார்னிங்
கோயம்புத்தூர் : டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள் என்று கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
TTF வாசன் என்பவர் Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 வருடமாக இந்த டிராவல் விலாக் பக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூ டியூபில் இருக்கிறார்கள்.
பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம்.

வைரல்
சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு இருந்தார். பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். அதே சமயம் இவர் வேகமாக செல்வது, சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது. 2கே கிட்ஸ் தொடங்கி பைக் மீது ஆர்வமாக இருக்கும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் சென்னைக்கு சில பொருட்கள் வாங்க வந்த போது அதை பற்றி முன்கூட்டியே வீடியோ போட்டு இருந்தார். இதையடுத்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.

கோவை
அதேபோல் தனது பிறந்தநாளை முன்னிட்டு TTF வாசன் நேற்று ரசிகர்களை சந்தித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இவர் ரசிகர்ளை சந்திக்க அழைப்பு விடுத்து இருந்தார். இதன் காரணமாக லட்சக்கணக்கில் நேற்று ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாலை விதிகள்
சாலை விதிகளை மதிக்காமல் இவர் வேகமாக ஓட்டுவதாக இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன. இந்த நிலையில் டிடிஎப் வாசன் பற்றி கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். சட்டத்திற்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் காவல்துறை கண்காணிப்பில் வருவார்கள். இவர்கள் எல்லாம் ஆட்டோமெட்டிக்காக காவல்துறை கண்காணிப்பில் வந்துவிடுவார்கள்.

கண்காணிப்பில்
இது போன்ற நபர்கள் தாங்கள் ஏதோ நல்லது செய்கிறோம். பெரிய ஆட்கள் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு ரோல் மாடல் என்று நினைத்துக்கொண்டு டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். காவல்துறை இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம். வேகமாக செல்ல கூடாது.

ஆக்சன்
இரவு நேரத்தில் வேகமாக போகும் வாகனங்களை நோட் செய்து வருகிறோம். வேகமாக செல்லும் நபர்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம். அவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்யும் திட்டம் இருக்கிறது. வேகமாக செல்லும்பட்சத்தில் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வோம், என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications