கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா “ஆவி”.. ஸ்டெர்லைட் “டிவி” - ஸ்டாலின் சைலண்ட் “அட்டாக்”! 2 பி.எஸ்-களுக்கு எகிறும் பிரஷர்

Google Oneindia Tamil News

கோவை: ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசுவதாக ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்ததாகவும், ஒப்புக்காகவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தி ஸ்ரீநிதி, பர்கூர் எம்.எல்.ஏ மதியழகன் மகன் கெளசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் பேசிய அவர், "கருணாநிதி பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் அவரது மகனது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் செலவு.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?ஜெயலலிதா மரணம்: ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் செலவு.. மொத்தம் எவ்வளவு தெரியுமா?

பொங்கலூர் பழனிசாமி

பொங்கலூர் பழனிசாமி

அவர் இருந்திருந்தால் இதனையும் தலைமையேற்று நடத்தி இருப்பார், இன்று அவரிடத்தில் இருந்து நான் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். பொங்கலூர் பழனிச்சாமி திருமணம் செய்தபோது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பின் அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

 ஓபிஎஸ் தியானம்

ஓபிஎஸ் தியானம்

ஜெயலலிதாவின் மறைவு மர்மமாக உள்ளது என அவர்கள் கட்சியின் உள்ளேயே கூறினர். ஓபிஎஸ் அவர்களுக்குள் இருந்த பிரச்சனையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆவியோடு பேசுகிறேன் என்று அமர்ந்தார். தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரே கூறினார். எனவே ஒரு ஒப்புக்காக ஒரு கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார்.

 ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமியின் தலைமையில் அந்த கமிஷன் ஒரு ஒப்புக்காக செயல்பட்டு வந்தது. அன்றே நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்தால் அந்த கமிஷனை முறையாக நடத்துவோம் என்று கூறி இருந்தோம். தற்பொழுது ஐந்து வருட நாட்களுக்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அந்த அறிக்கையை எங்களிடத்தில் கொடுத்துள்ளார்.

பல பிரச்சனைகள்

பல பிரச்சனைகள்

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அதனை தற்போது நான் கூறவில்லை சட்டமன்றத்திற்கு அது வரும். சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

மேலும் தூத்துக்குடி சம்பவமும் கடந்த ஆட்சியில் தான் நடந்தது அன்றைய முதல்வர் அதனை தொலைக்காட்சியில் பார்த்தது தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். அந்த அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம். இன்றைக்கு ஈபிஎஸ் வாக்குறுதிகளின் நிறைவேற்ற வில்லை என கூறி வருகிறார் ஆனால் அதனை நிறைவேற்றி வருவதற்கான எடுத்துக்காட்டுகளாக தான் நான் இதனை கூறியுள்ளேன்." என்றார்.

English summary
Will take action on Jaya death and Sterlite gun shoot - MK Stalin: ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசுவதாக ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்ததாகவும், ஒப்புக்காகவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X