கஷ்டமா இருக்கு! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இலங்கை முன்னாள் அமைச்சர் புகார்.. என்ன சொன்னார்?
கொழும்பு : இலங்கையில் தேர்தல்களை நடத்தாமல் அரசு இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையில், அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ் மற்றும் இஸ்லாமிய கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜெய்ஷங்கரிடம் ரவூப் ஹக்கீம் விளக்கம் அளித்தார். அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் தமிழ், இஸ்லாமியர்களை உள்ளடக்கி தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார். இதனை கேட்ட அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கை இஸ்லாமியர்களின் இந்த வேண்டுகோளை ஏற்பதாக உறுதியளித்தார்.
இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின்போது, இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் குறித்த விவகாரங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தமிழர் தரப்பின் பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிந்துணர்வுடன் செயற்பட்டதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம். இஸ்லாமிய சமூகத்தின் விவகாரங்களில் தங்கள் கட்சி அக்கறையுடனும் நிதானமாகவும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக விளக்கமளித்தார்.

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் அமல்படுத்தப்படும் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டங்களில் மூதூர், ஒலுவில் போன்ற துறைமுகங்களையும் சேர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
Recommended Video
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், "இரு நாடுகளுக்கு இடையிலான மத, கலாசார விவகாரங்களில் பல்வேறு இனங்கள் இந்திய துணைக் கண்டம் மற்றும் இலங்கையுடன் தொடர்புபடுத்தி வளர்ச்சியடைந்துள்ளன. இதனை மேம்படுத்துவதற்கு சகல மதங்களையும் முதன்மைப்படுத்திய தொடர்பு முறை ஒன்றை இந்தியா முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை இந்த சந்திப்பின்போது வெளிப்பட்டது." என்றார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications