வன்முறைக்கு உங்க குண்டர்கள்தான் காரணம்! மகிந்தா ராஜபக்சவுக்கு சங்ககாரா சரவெடி பதிலடி..!
கொழும்பு : இலங்கையில் வன்முறை தீர்வாகாது என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவுரை கூறிய நிலையில் உங்களது ஆதரவாளர்கள்தான் வன்மை தொடங்கியது என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால், ராஜபக்சே குடும்பம் கடும் சிக்கலில் உள்ளது.
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

இலங்கை விவகாரம்
பொருளாதாரக் கொள்கைகளை தவறாக நிர்வகித்ததால் தான் இலங்கை நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகக் கூறி கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்திற்கெதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் தோல்வி காரணமாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள், மக்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

கோத்தபய திட்டவட்டம்
நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச நாடுகள், உலக வங்கி உள்ளிட்ட பொருளாதார அமைப்புகளிடம் கடன் வாங்கும் முயற்சியை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை மற்றும் போராட்டங்களுக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்புகிறார். அதே நேரத்தில் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீடீர் தாக்குதல்
அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மக்கள் காயம்
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். தாக்குதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு அதிக அளவிலான ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டில் வன்முறை தீர்வாகாது எனவும், பொது மக்கள் அமைதியை கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சங்ககாரா பதிலடி
அவரது பேச்சுக்கு இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் குமார் சங்ககாரா பதிலடி கொடுத்துள்ளார் இது குறித்து பேசிய அவர் திரு மஹிந்த ராஜபக்ஷ உங்களது ஆதரவாளர்களால் தான் வன்முறை தொடங்கியது உங்கள் அலுவலகத்தில் இருந்து வந்த குண்டர்கள் அமைதியாக போராடி வந்தவர்களை தாக்கினர். உங்கள் அட்வைஸ் இலங்கை மக்களுக்கு தேவை இல்லை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications