இலங்கையில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...காட்டுமிராண்டித்தனமான செயல் - செந்தில் தொண்டமான் கண்டனம்
நாட்டுமக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.தொ.கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குண
கொழும்பு: ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும்,இத்துப்பாக்கி சூடு சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாட்டுமக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.தொ.கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து செந்தில் தொண்டமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு
பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து காவல்துறையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை தேவை
இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும்,இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி
நாட்டு மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மக்களின் போராட்டம்
மக்களின் போராட்டம் நியாயமானது. மக்களை பாதுக்காக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளமையானது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. அரசாங்கம் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமையை மீள்கட்டியெழுப்ப கொடுக்கவில்லை என்பது அவர்களின் தற்போதைய செயல்களில் அறியமுடிகிறது. மக்களின் போராட்டம் நியாயமானது. மக்களை பாதுக்காக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளமையானது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. அரசாங்கம் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமையை மீள்கட்டியெலுப்ப கொடுக்கவில்லை என்பது அவர்களின் தற்போதைய செயல்களில் அறியமுடிகிறது.

காட்டுமிராண்டித்தனம்
நாட்டுமக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.தொ.கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications