கடலூரில் 39 வயசில் விபச்சாரம்.. கணவனுடன் சேர்ந்து மாணவிகளை? திருவண்ணாமலை தமிழரசியை கைது செய்த போலீஸ்
கடலூர்: கடந்த 2014ம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி இருவரும், இப்போது சிக்கியிருக்கிறார்கள்.. இந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது முக்கிய குற்றவாளிகளான தம்பதி இருவருமே ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது கடலூரில்?
கடந்த 2014ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் திடீரென மாயமாகிவிட்டார்கள்.. இதனால், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்களும் போலீசில் புகார் தந்தனர்.

போலீஸ் விசாரணை
இந்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.. இறுதியில், ஒரு வாரத்திற்கு பிறகு 2 சிறுமிகளும் வீடுகளுக்கு திரும்பி வந்தார்கள்.. ஆனால், 2 பேரின் உடல்நிலைமையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது..
இதைப்பார்த்து பதறிப்போன பெற்றோர் , சிறுமிகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போதுதான், அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார்(39), இவரது மனைவி தமிழரசி(39) இருவரும், தங்களை கடத்தி சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள் என்று சொல்லி கதறி அழுதனர்.
கடலூர் மகிளா கோர்ட்
திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புரோக்கர்கள் மூலம், பாலியல் தொழிலில் தங்களை ஈடுபடுத்தியதையும் சொல்லி அழுதனர்.. இதையடுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், கடந்த 2018ல், சதீஷ்குமார், தமிழரசி இருவருமே தலைமறைவாகிவிட்டார்கள்.. எனவே, இந்த ஜோடியை தேடும் பணி தீவிரமானது. இதனிடையே, இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
தம்பதி தலைமறைவு
எனினும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள்.. மேலும் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனவே, இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெபினா(40) என்பவரை மட்டும் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அனைவருமே சிக்கிவிட்ட நிலையில், சதீஷ்குமார், தமிழரசி மட்டும் கிடைக்கவில்லை.. கடந்த 7 வருடங்கள் தலைமறைவாக இருந்த அவர்களை தேடும் பணியை மட்டும் போலீசார் கைவிடவில்லை.
திருவண்ணாமலை வீட்டு வேலை
இந்நிலையில், சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் தற்போது கிடைத்தது. இதையடுதது, கருமத்தம்பட்டிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழரசி திருவண்ணாமலையில் தங்கி, ஒரு வீட்டு வேலை செய்வது தெரிய வந்தது.
உடனே திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தமிழரசியை சுற்றி வளைத்து கைது செய்தது. இப்போது, தம்பதி இருவருமே கடலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications