கடலூர் லோக்சபா தொகுதி:'முந்திரிக் காடு' மண்ணில் முடிசூடப் போவது எந்த கட்சி? மும்முர பரபரப்பில் களம்!
கடலூர்: திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளை நம்பி காங்கிரஸும் தேமுதிகவும் மோதுகின்றன. தங்களது வலிமையான வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது என்பதை நிரூபிக்க பாமக களத்தில் நிற்கிறது.
கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி.

கடலூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,01,392; ஆண்கள்- 6,88,269; பெண்கள்- 7,12,909; 3-ம் பாலினத்தவர்- 214
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
அழகிரி(காங்கிரஸ்)3,20,473
சம்பத்(அதிமுக)2,96,941
தாமோதரன்(தேமுதிக) 93,172
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஆ. அருண்மொழித்தேவன்(அதிமுக) 4,81,429
நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக) 2,78,304
ஜெயசங்கர்(தேமுதிக) 1,47,606
எஸ். அழகிரி(காங்கிரஸ்) 26,650
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
டி. ஆர். வி. எஸ். ரமேஷ்(திமுக) 5,22,160
கோவிந்தசாமி(பாமக) 3,78,177
சித்ரா(நாம் தமிழர் கட்சி) 34,692
அண்ணாமலை( மக்கள் நீதி மய்யம்) 23,713
2024-ல் களம் காண்பவர்கள்
விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
சிவக்கொழுந்து (தேமுதிக)
தங்கர்பச்சான்(பாமக)
மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி)
கடலூர் கள நிலவரம் என்ன? 7 முறை காங்கிரஸ் வென்ற தொகுதி. இத்தொகுதியில் திமுக 5 முறை வென்றுள்ளது. அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சொற்பமான வாக்கு வங்கிதான். ஆனாலும் திமுகவின் வலிமையான வாக்கு வங்கியை நம்பியே களம் காண்கிறது. அதேபோல தேமுதிகவுக்கும் சொற்பமான வாக்கு வங்கி. இங்கு அதிமுகவை நம்பி களத்தில் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது தேமுதிக. பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் பாஜக, கடலூர் தொகுதியை பாமகவுக்கு கொடுத்துவிட்டது. இயக்குநர் தங்கர்பச்சானை பாமக வேட்பாளராக களமிறக்கி இருக்கிறது. அதிகமான கிராமப்புறங்களைக் கொண்டது கடலூர் தொகுதி. முந்திரிதான் பிரதானம். கடலூர் துறைமுகமும் அது சார்ந்த மீன்பிடித் தொழிலும் அடுத்ததாக உள்ளன. முந்திரி தொழில் சார்ந்த கோரிக்கைகள், மீனவர் பிரச்சனைகள் காலந்தோறும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. முந்திரி ஏற்றுமதிக்கான அதிக முக்கியத்துவம், முந்திரி சார்ந்த தொழிற்சாலைகள் என்பது கடலூர் தொகுதி மக்களின் நீண்டகால கனவு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications