கடலூரில் மேஸ்திரி என்ன கேட்டாரு தெரியுமா? அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில்? 300 மூட்டைக்கு? ஓமை காட்
கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய மேஸ்திரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசின் துறைகளில், ஏராளமான பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு, வருவாய்த்துறை துறை விளங்குகிறது.. எனவேதான் இந்த துறையில் லஞ்ச புகார்கள், அதையொட்டிய கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன.

இருக்கின்ற துறைகளிலேயே வருவாய்த்துறையில்தான் அதிகமான லஞ்சம் நிறைந்திருப்பதாக, புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.. அதேபோல, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி கொண்டிருக்கிறது.
புதிய மின் இணைப்பு
2 நாட்களுக்கு முன்புகூட கிருஷ்ணகிரியில் ஒருவர் சிக்கினார். அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.. தன்னுடைய புது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதை பரிசீலனை செய்த, மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் இருவரும், புதிய மின்இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டார்களாம்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ராஜேந்திரன் புகார் சொன்னதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையுமே போலீஸ் கைது செய்திருந்தது.. இப்போது நெல் மூட்டை விற்பனை செய்பவரிடம்கூட லஞ்சம் கேட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.
நெல் மூட்டை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது தரசூர் கிராமம்.. இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், அதேபகுதியைச் சேர்ந்த குலோத்துங்கள் என்பவர், தன்னுடைய 300 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றிருக்கிறார்..
அப்போது, மேஸ்திரியாக பணிபுரியும் 39 வயதுடைய வேல்மணி, ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் 300 மூட்டைக்கு ரூ.16,500 கொடுத்தால் தான் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று, குலோத்தங்கனிடம் கூறினாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த குலோத்துங்கன், பாடுபட்டு உழைத்த நெல் மூட்டைகளுக்கு, எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று தயங்கினார். மேலும் லஞ்சம் தர விரும்பாலும், இதுகுறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடமும் புகார் அளித்தார்.

சுற்றி வளைத்த போலீஸ்
பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுறுத்தல்படி, நேரடி கொள்முதல் நிலையம் சென்ற குலோத்துங்கன் ரூ.16,500-ஐ மேஸ்திரி வேல்மணியிடம் தந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கடலூர் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸார், மேஸ்திரி வேல்மணியை, சுற்றி வளைத்து பிடித்தனர்..
அவரிடம் விசாரணை நடத்தியபோது, நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக, அந்த லஞ்சப்பணத்தை வாங்கியதாக கூறினார்.. இதையடுத்து மேஸ்திரி வேல்மணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications