வாட்டர் டேங்கில் துர்நாற்றம்.. மேலே ஏறி பார்த்தவர்களுக்கு ‘ஷாக்’.. கடலூர் அருகே பரபரப்பு!
குடிநீர் தொட்டிக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் : கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், சந்தேகமடைந்த கிராம மக்கள், குடிநீர் தொட்டியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சடலமாகக் கிடந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து குடிநீர் தொட்டிக்குள் கொண்டு வந்து போட்டார்களா? எனவும் அவ்வாறு அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதற்கு என்ன காரணம்? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞரின் சடலம் கிடந்த அந்த குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications