Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜ ‘வெண்ணிலா கபடி குழு’ கிளைமாக்ஸ்! களத்தில் மரித்த வீரர்! கபடி கபடி சொல்லும் போதே பிரிந்த உயிர்!

Subscribe to Oneindia Tamil

கடலூர் : வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வருவது போல கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர் இறுதியாக ரைடு சென்றபோது எதிரணியினர் அவரை பிடித்த நிலையில் களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    களத்தில் மரித்த வீரர்! கபடி கபடி சொல்லும் போதே பிரிந்த உயிர்!

    ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் விஜய் சேதுபதி கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    ஒரு சாதாரண கிராமத்து கபடி வீரர்கள் மிகப்பெரிய கபடி தொடர் எப்படி ஜெய்கிறார்கள்? அவர்களது வாழ்க்கை முறை சாதி விளையாட்டில் இருக்கும் அரசியல் என எதார்த்தமான நிலவரத்தை பதிவு செய்த இந்த திரைப்படம் பலரது விருப்பமான தேர்வாக உள்ளது.

    வெண்ணில கபடி குழு

    வெண்ணில கபடி குழு

    குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள கிளைமாக்ஸ் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. பரபரப்பான இறுதிப் போட்டியில் லாஸ்ட் ரைட் செல்லும் விஜய் சேதுபதியை விஷ்ணு விஷால் பிடிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு களத்திலேயே உயிரிழப்பது போல காட்சி அமைந்திருக்கும் தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் கடலூரில் நிஜமாகி இருப்பதுதான் பலரையும் வேதனை அடைய செய்துள்ளது.

     கபடி வீரர்

    கபடி வீரர்

    கடலூர் மாவட்டம் புரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் விமல். மிகச்சிறந்த கபடி வீரரான அவர் முரட்டுக்காளை அணி என்ற கபடி அணியில் கேப்டனாகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாநாடிக்குப்பம் பகுதியில் மாநில அவளவிலான கபடி தொடர் நடைபெற்றது.

    திடீர் மரணம்

    திடீர் மரணம்

    இதில் புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த முரட்டுக்காளை அணி வீரர்கள் பங்கேற்றனர். தனது அணி சார்பாக விமல் களமிறங்கி விளையாடினார். அப்போது போட்டியின் கடைசி நிமிடத்தில் லாஸ்ட் ரைடு சென்ற விமல் எதிரணி வீரர்களை தொட்டுவிட்டு எல்லைக்கோட்டை அடைந்தார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது விமல் தவறி கீழே விழுந்தார். எல்லைக்கோட்டை அவர் அடைந்ததாக நடுவர் விசில் அடித்ததை அடுத்து வீரர்கள் அவரை விட்டு நகர்ந்து சென்றனர் அப்போது எழுந்து நடக்க முயன்ற விமல் திடீரென மயங்கி சரிந்தார்.

    அதிர்ச்சி வீரர்

    அதிர்ச்சி வீரர்

    இதனை தொடர்ந்து அவரது சகவீரர்கள் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விமல் கபடி மைதானத்தில் கடைசியாக சென்றபோது அவரது ஊர் இளைஞர்கள் வீடியோ எடுத்தனர் .அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது கபடி போட்டியின் போது உயிரிழந்த கபடி வீரருக்கு பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+