Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாய் தங்கம்.. கடலூர் வந்த டிடிஎஃப் வாசன் அட்ராசிட்டி.. 5 பிரிவுகளில் வழக்கு! போலீஸின் வாத்தி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

கடலூர் : அதிவேகமாக பைக் ஓட்டுவது, சினிமா படங்களில் வருவது போல ஸ்டண்ட் செய்து யூட்யூபில் பிரபலமான டிடிஎஃப் வாசன் இன்று கடலூர் வந்தபோது அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வாசன் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாய்ந்துள்ளன.

எங்கெங்கு காணினும் வாசனடா என்பது போல கடந்த சில நாட்களாகவே டிடிஎஃப் வாசன் குறித்த பதிவுகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. அவரது பிறந்தநாளுக்கு அவரைக் காண ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள் தான் தற்போது ஹாட் டாபிக்.

கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றியதை அடுத்து அவருக்கு சுமார் 27 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

 டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

குறிப்பாக அவருக்கென்றே நடிகர்களுக்கு இணையாக ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பிறந்த நாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டம் தான் தற்போது இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் அம்பத்தூரே திணறிப் போனது.

கடலூர் வருகை

கடலூர் வருகை

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் இன்று கடலூர் வந்தபோது அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடலூர் புதுப்பாளையத்தில் செந்தில் செல்அம் என்ற இளம் இயக்குனர் கடலூரில் திரைப்பட அலுவலகம் திறக்க பைக் ரைடர் மற்றும் youtube புகழ் டிடிஎஃப் வாசனை இன்று கடலூருக்கு அழைத்திருந்தார்.

புள்ளிங்கோ

புள்ளிங்கோ

இந்நிலையில் கடலூர் செல்அம் அலுவலகம் திறக்க வர இருப்பதாக டிடிஎஃப் வாசன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை அடுத்து டிடிஎஃப் வாசனை பாலோ செய்யும் புள்ளிங்கோ கேடிஎம் போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களோடு கடலூர் புதுப்பாளையத்திற்கு படையெடுத்தனர். டிடிஎஃப் வாசனை காண ஒரே நேரத்தில் அதிக அளவில் இளைஞர்கள் கூடியதாலும், கூடிய புள்ளிங்கோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹாரன் அடித்துக் கொண்டும், வாகனத்தை முறுக்கி அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பியதாலும் புதுப்பாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

அடாவடித்தனம்

அடாவடித்தனம்

காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியும் கூட்டம் கூடியதாலும் புள்ளிங்கோவின் அடாவடித்தனத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர் அதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டிடிஎஃப் வாசனை காண வேண்டும் என்பதற்காக அதிவேகமாக வாகனங்களை இயக்கி காவல் துறையினர் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களையும் டி டி எப் வாசனின் பாலோயர்ஸ் காயப்படுத்தினர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

டிடிஎஃப் வாசனின் ரசிகர்களின் நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கிய 200 மேற்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். அதுமட்டுமல்ல,டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாம்.இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கி வீடியோ எடுத்து வைரலான டிடிஎஃப் வாசன் சமீபத்தில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்படுத்திய மோகத்தால் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்கிய தங்களது உயிர்களையும் இழந்து வருகின்றனர். லைக்குகாகவும் ஃபாலோவுக்காகவும் சாகசங்களை செய்யும் இளைஞர் டிடிஎஃப் வாசனை பாலோ செய்து காவல்துறையின் அபராததுக்கு சிக்கிய கடலூரின் புள்ளிங்கோ ஐயோ பரிதாபம் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+