விருத்தாச்சலத்தில் கடும் போட்டி.. திமுக -தேமுதிக இடையே ஒரு சதவீதம் வித்தியாசம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா, திமுக, அதிமுகவிடம் கடும் சவாலை சந்திப்பார் என தெரிகிறது.
எனினும் அதிமுகவிற்கு நிகரான ஆதரவை பெற்றுள்ள பிரேமலதா, திமுக வை விட ஒரு சதவீதம் மட்டுமே குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக சத்தியம் டிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சத்தியம் டிவி 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிட்டு வருகிறது . கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திமுக கூட்டணி ஐந்து இடங்களிலும், அதிமுக பாமக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக கூறியுள்ளது.

அதிமுக முன்னிலை
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக 30 சதவீதம்; விடுதலை சிறுத்தைகள் கட்சி 25சதவீதம்; நாம் தமிழர் 12 சதவீதம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 12சதவீதம் ,மக்கள் நீதி மய்யம் 10சதவீதம் பெறும் என சத்தியம் டிவி கணித்துள்ளது.

முஸ்லிம் லீக்
சிதம்பரம் தொகுயில் திமுக கூட்டணயில் உள்ள இ.முஸ்லிம் லீக்: 40சதவீதம்; அதிமுக 37 சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5 சதவீதம்,. நாம் தமிழர் 5 சதவீதம் மற்றும் மக்கள் நீதி மய்யம் 5 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி
புவனகிரி தொகுதியில் அதிமுக 43 சதவீதம்; திமுக 29 சதவீதம்; நாம் தமிழர் 11 சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 9 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக 41சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் அதிமுக 26சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேல்முருகன்
பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 50சதவீதம் வாக்குகளும், அதிமுக 47 சதவீதம் வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 1சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி தொகுதியில் பா.ம.க. 52சதவீதம்; திமுக 47சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது,

பிரேமலதா
விருத்தாசலம் தொகுதியில் திமுக 29சதவீதம்; அதிமுக 28சதவீதம்; தேமுதிக (பிரேமலதா) 28 சதவீதம், நாம் தமிழர் 6 சதவீதம் , மக்கள் நீதி மய்யம் 6 சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளதாக சத்தியம் டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி தொகுதியில் திமுக 45சதவீதம்; பாஜக- 27சதவீதம்; மக்கள் நீதி மய்யம் 9சதவீதம்; நாம் தமிழர் 6சதவீதம், தேமுதிக 5சதவீதம் பெற வாய்ப்பு உள்ளதாம். கடலூர் தொகுதியில் அதிமுக 31சதவீதம்; திமுக 30சதவீதம்; தேமுதிக 10சதவீதம்; நாம் தமிழர் 10சதவீதம் மற்றும் மக்கள் நீதி மய்யம் 10சதவீதம் பெறக்கூடும் என சத்தியம் டிவி கணித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலையில உள்ளது.












Click it and Unblock the Notifications