கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்! 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்த தோழிகள்! பின்னணி?

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடன் பயின்ற இரு மாணவிகள் சுமார் 2 மணி நேரம் நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர்.

மேலும் பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீச்சு தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 இன்று முதல் தமிழகத்தில் 5 நாட்கள் கொட்டப்போகும் கன மழை - சென்னைக்கும் சேர்த்துதான் வார்னிங்! இன்று முதல் தமிழகத்தில் 5 நாட்கள் கொட்டப்போகும் கன மழை - சென்னைக்கும் சேர்த்துதான் வார்னிங்!

பள்ளி மாணவி மரணம்

பள்ளி மாணவி மரணம்

இந்நிலையில் சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் என்வும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசாரணைக் குழு

விசாரணைக் குழு

இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நியமிக்கப்பட்டு விசாரணையைத் துவக்கியுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் குழுவினர் தனது ஆய்வறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. இதனையடுத்து மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்


இந்த நிலையில் மரணமடைந்த மாணவியுடன் பயின்ற இரண்டு சக மாணவர்கள் இந்த வழக்கில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடன் பயின்ற இரு மாணவிகள் சுமார் 2 மணி நேரம் நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வாக்குமூலத்தின் படி, வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்கின்றனர் காவல்துறையினர்.

ஆய்வறிக்கை சமர்பிப்பு

ஆய்வறிக்கை சமர்பிப்பு

மேலும் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் குழுவினர் தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதனிடையே கனியாமூர் பள்ளி கலவரம் வழக்கில் மேலும் 3 பேர் கைது சிறப்பு புலனாய்வு குழு போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In connection with the mysterious death of a Kallakurichi private school girl, two students who studied with the Kallakurichi girl have given a statement in front of the judge for about 2 hours in the Villupuram Chief Criminal Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X