உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லை.. முழு நிர்வாணம்.. வீடுகளில் திருட கிளம்பிய வினோத பேர்வழி!
நிர்வாண கோலத்துடன் திருடனின் சிசிடிவி காட்சி பதிவாகி உள்ளது
Recommended Video
கடலூர்: ச்சீ...ச்சீ.. ச்சீ.. உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லை.. முழுசா நிர்வாணமாக வீடுகளில் திருட கிளம்பிவிட்டார் ஒரு வினோத பேர்வழி!
விருத்தாசலம் விஎன்ஆர் நகரில் உள்ள ஜமால் பாஷா தெரு உள்ளது. இந்த தெருவில் வீடுகளில் உள்ள பொருட்கள் திடீர் திடீர் என மாயமானது. குறிப்பாக ஜன்னல் ஓரம் ஒரு பொருள் வைத்தால், அதுதான் காணாமல் போய் கொண்டிருந்தது. இதனால் ஜமால் பாஷா தெருவாசிகள் குழப்பம் ஆனார்கள்.
பெரும்பாலும் இந்த தெருவாசிகளுக்கு தங்கள் வீட்டு ஜன்னல் அருகேதான் ஷெல்ப்கள் இருக்கின்றன. அதனால் அங்குதான் செல்போன், வாட்ச், என முக்கிய பொருட்களை வைக்க முடியும். அப்படி வைத்த பொருட்கள்தான் மாயமாகி கொண்டே இருந்தன.

சிசிடிவி காட்சி
இந்த சமயத்தில், நேற்று விடிகாலை அதே தெருவில் உள்ள ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் சத்தம் கேட்டது. தூங்கி கொண்டிருந்த எல்லாரும் அடித்து பிடித்து எழுந்தார்கள். அப்போதுதான் யாரோ தன் வீட்டில் திருட வந்ததுபோல தெரிந்தது. அதனால் வீட்டு முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தார்.

பெரிய பைப்
அதை பார்த்த ரம்ஜான் அலி மட்டுமல்ல.. ஜமால் பாஷா தெருவாசிகளே தெறித்துகொண்டு ஓடினார்கள். உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல், ஒருவர் அந்த தெருவுக்குள் வந்து கொண்டிருக்கிறார். அவரது கையில் ஒரு பிளாஸ்டிக் பைப் இருக்கிறது. ரம்ஜான் அலி வீட்டில் வந்து பொருட்களை அபேஸ் செய்ய முயல்வதும் தெரிகிறது. இதன்பிறகு தூங்கி கொண்டிருப்பவர்கள் விழிக்கும் சத்தம் கேட்டதும், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடுகிறார். இந்த காட்சிதான் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

நிர்வாண கோலம்
அது மட்டுமல்ல.. அந்த பைப்பை ஒவ்வொரு வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே விட்டு பொருட்களை அலேக்காக தூக்கி கொண்டு போனது இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. வீடுகளின் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டி பார்ப்பது.. பக்கவாட்டில் இருக்கும் படிக்கட்டில் ஏறுவது.. அங்குமிங்கும் நோட்டம் போட்டுக் கொண்டு நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் அலைவதுமாக இருக்கிறார்.

நியூட் திருடன்
ஆனால் இந்த விசித்திர திருடன் யார் என்றே தெரியவில்லை. எதற்காக நிர்வாண கோலத்தில் வந்து திருட வேண்டும் என்றும் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், இந்த புதுமையான நியூ & நியூட் திருடனை நினைத்து ஜமால் பாஷா தெரு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications