டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாக்கடிக்கும் டீன் ஏஜ்.. 3 ஆண்டுகளில் 1.65 லட்சம் பேர் தற்கொலை.. 4வது இடத்தில் தமிழ்நாடு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இளம் வயதினர் தற்கொலை கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. 14 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் திருமணப்பிரச்சினை, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, வேலையின்மை, குடும்பப் பிரச்சினை காரணமாக அதிக அளவில் தற்கொலை செய்துக்கொள்வதாக அரசு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்! இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!

உலகில் அதிக இளைஞர்கள் சக்தியைக் கொண்ட நாடு இந்தியா. 45% இளைஞர்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. வாழ்க்கையில் சந்தோஷமான சூழ்நிலையை அனுபவிக்கும் இளம்பருவத்தினர் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்துக்கொள்வது அதிகரித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

 மத்திய அரசு தகவல்

மத்திய அரசு தகவல்

14-30 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் தற்கொலைகள் 2017 முதல் 2019 வரையுள்ள 3 ஆண்டுகளில் 1,65,471 இளம் வயதினர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிலும் குறிப்பாக 14 வயது முதல் 18 வயது வரையுள்ள இளம் வயதினர் 24,568 பேரும் 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளம்வயதினர் 1,14,903 பேர்களும் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய பாராளுமன்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கான அமைச்சர் ஸ்ருமிதி இரானி கடந்த ஜூலை 30 ஆம் தேதி புள்ளி விவரத்தை அளித்துள்ளார்.

 யார் யார் எத்தனை வயதில் என்ன பிரச்சினைக்காக தற்கொலை விவரம்

யார் யார் எத்தனை வயதில் என்ன பிரச்சினைக்காக தற்கொலை விவரம்

2017 ஆம் ஆண்டு- 14 வயது அதற்கு மேல் 18 வயதுக்கு கீழ் 3711/ஆ 4318/பெ 0/மூன்றாம் பாலினம்- மொத்தம்- 8029

2017 ஆம் ஆண்டு - 18 வயதுக்கு மேல் 30 வயதுக்குட்பட்டோர் 27748/ஆ, 17457/ பெண், 12 / மூன்றாம் பாலினத்தவர், மொத்தம்- 45217

2018 ஆம் ஆண்டு - 14 வயது அதற்கு மேல் 18 வயதுக்கு கீழ் 3752/ஆ 4410/பெ 0/மூன்றாம் பாலினம்- மொத்தம்- 8162

2018 ஆம் ஆண்டு - 18 வயதுக்கு மேல் 30 வயதுக்குட்பட்டோர் 28894/ஆ 18009/பெ 9/மூன்றாம் பாலினம்- மொத்தம்- 46912

2019 - ஆம் ஆண்டு - 14 வயது அதற்கு மேல் 18 வயதுக்கு கீழ் 3780/ஆ 4597/பெ 0/மூன்றாம் பாலினம்- மொத்தம்- 8377

2019 - ஆம் ஆண்டு - 18 வயதுக்கு மேல் 30 வயதுக்குட்பட்டோர் 30833/ஆ 17930/பெ 11/மூன்றாம் பாலினம்- மொத்தம்- 48774

2017 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மொத்தம் ஆண்கள்-98718 , பெண்கள்-66721, மூன்றாம் பாலினத்தவர்- 32, மொத்தம்- 1,65,471, (இந்திய அளவில் வெளியிட்ட தரவுகளின் படி)

ஆண்கள் 98718 பேர்களும், பெண்கள் 66721 பேர்களும் மூன்றாம் பாலினத்தினர் 32 பேர்களும் ஆக மொத்தம் 165471 இளம் வயதினரை 2017 முதல் 2019 வரை இந்தியா இழந்து உள்ளது.

 ஆண்டுதோறும் அதிகரிக்கும் தற்கொலை அளவு

ஆண்டுதோறும் அதிகரிக்கும் தற்கொலை அளவு


2017 ம் ஆண்டு 53,246 பேர்களும், 2018 ம் ஆண்டு 55,074 பேர்களும் 2019 ஆண்டு 57,151 பேர்களும் என ஆண்டு ஆண்டுக்கு தற்கொலை வளர்ந்தே வந்துள்ளது.
தமிழகம் 4 ஆம் இடம்

இந்தியா முழுவதும் 1,65,471 பேர்கள் தற்கொலை செய்து கொண்டாலும் மகாராஷ்ட்ராவில் மட்டும் 19,778 பேர்கள் தற்கொலை செய்து முதல் இடத்தில் இருக்கின்றது. மத்திய பிரதேசம் 17,847 எண்ணிக்கையுடன் 2 ஆம் இடத்திலும், மேற்கு வங்காளம் 16,493 பேர் எண்ணிக்கையுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 15,312 பேர் என்கிற எண்ணிக்கையுடன் 4 ஆம் இடத்திலும் உள்ளது. அடுத்து கர்நாடகா 12,259 பேருடன் 5 ஆம் இடத்திலும் உள்ளது.

 50% முக்கிய மாநிலங்களில் நடந்துள்ளது

50% முக்கிய மாநிலங்களில் நடந்துள்ளது

2017 முதல் 2019 வரை இந்தியாவில் நடந்த மொத்த தற்கொலைகளில் 50 சதம் தற்கொலைகள் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேஷ், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா என ஐந்து மாநிலத்தில் நடந்துள்ளது. இது மிகவும் வருத்தம் தர கூடிய செய்தி.

14 வயதுக்கு மேற்பட்டோர் 18 வயதுக்குட்பட்டோர் தற்கொலைக்கு காரணம்

14 முதல் 18 வரையுள்ள இளம் வயதினரில் 639 பேர் திருமணம் தொடர்பான பிரச்சனைகளினால் தற்கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமணங்கள் நடப்பதும், அதை தடுக்க தவறியாதால் 639 இளம் பருவத்தினர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பால்ய திருமணத்தால் தற்கொலை

பால்ய திருமணத்தால் தற்கொலை

குறிப்பாக 14 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட 59 பெண் குழந்தைகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துள்ளது அடுத்து அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

தேர்வு பயத்தால் தற்கொலை

* 14 முதல் 18 வரையுள்ள இளம் வயதினரில் 4046 பேர்கள் தேர்வு எழுவதில் உள்ள பயம் அல்லது தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடச்சுமையின் அழுத்தம், மதிப்பெண்ணை வைத்து அளவீடு, விரும்பாத பாடப்பிரிவை தேர்வு செய்வது, தேர்வு தோல்வியை எதிர்க்கொள்ள பயம் போன்றவைகள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 இளம்பருவ காதலால் தற்கொலை

இளம்பருவ காதலால் தற்கொலை

இளம்பருவ குழந்தைப் பருவ காதல் (பாலின ஈர்ப்பு) காரணமாக ஏற்படும் காதல் தோல்வியால் 3315 பேர்கள் தற்கொலை செய்துள்ளனர். குழந்தைப்பருவத்தில் ஏற்படும் பாலின ஈர்ப்பை தவறாக காதல் என கருதி அதற்காக வாழ்க்கையை இழப்போர் அதிகம்.

 பெற்றோரின் சண்டையால் தற்கொலை

பெற்றோரின் சண்டையால் தற்கொலை

* பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகள், ஏனைய குடும்ப பிரச்சனை தொடர்பான காரணங்களுக்காக 6,098 பேர்கள் 14 முதல் 18 வயது உள்ள இளம்பருவத்தினர் தற்கொலை செய்து உள்ளனர். குடும்பச்சண்டைகளுக்கு பிரதான காரணமாக இருப்பது குடும்ப பொருளாதாரச் சூழல், மதுப்பழக்கம், வறுமை போன்றவைகளே, இது இளம் பருவத்தினரை கடுமையாக பாதிக்கிறது.

* 14 முதல் 18 வரையுள்ள இளம் வயதினரின் தற்கொலைக்கு 50 சதவித காரணம் பெற்றோர் சண்டையிடுவது, குடும்ப பிரச்சனை, தேர்வு பயம், காதல் தோல்வி ஆகியவை.

 18-30 வயதினர் தற்கொலைக்கு காரணம்

18-30 வயதினர் தற்கொலைக்கு காரணம்

* 18 வயது முதல் 30 வயது உள்ள இளம் வயதினரில் திருமணம் தொடர்பான பிரச்சனைக்காக 12,747 பேர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர், அதிலும் குறிப்பாக 4,173 பெண்கள் வரசட்ணை கொடுமையால் தற்கொலை செய்து உள்ளனர் 220 ஆண்களும் வரசட்ணை கொடுமையால் தற்கொலை செய்துள்ளனர்.

 தேர்வு பயம்

தேர்வு பயம்

* 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளம் வயதினரில் 3109 பேர்கள் தேர்வு எழுவதில் உள்ள பயம் அல்லது தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் காதல் தோல்வியால் 10,921 பேர்கள் தற்கொலை செய்து உள்ளனர் காதல் தோல்வியால் ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

 குடும்பப் பிரச்சினை

குடும்பப் பிரச்சினை

* 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளம் வயதினரில் கணவன், மனைவி பிரச்சினை உள்ளிட்ட குடும்ப பிரச்சனை காரணமாக 45,189 பேர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். இந்தியாவில் மூன்றில் ஒருவர் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வது இத்தரவுகளில் தெரிகின்றது.

 வேலையின்மை முக்கிய காரணம்

வேலையின்மை முக்கிய காரணம்

* 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளம் வயதினரில் 3,938 பேர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக 3,457 ஆண்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 கொரோனா காலம் குறித்த தகவல்கள் அதிகரிக்குமா?

கொரோனா காலம் குறித்த தகவல்கள் அதிகரிக்குமா?

இத்தரவுகள் அனைத்தும் 2017 முதல் 2019 வரை உள்ளவையே இன்னும் கொரோனா நோய் பயம், ஊரடங்கு, பொருளாதார பாதிப்பு, கல்விப்பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
A shocking data reveals that 1.65 lakh youth have committed suicide in India in the last 3 years. Tamil Nadu is placed 4th in the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X