ஆட்டிப் படைக்கும் குரங்கு அம்மை! இத்தனை பேருக்கு பாதிப்பா? வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
டெல்லி : இங்கிலாந்தில் மட்டும் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போன்ற ஒரு சுகாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

குரங்கு அம்மை பாதிப்பு
இந்நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தற்போது பிரான்ஸ், அமெரிக்கா 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், மருத்துவ கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை அபாயகரமானது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை முறை
குரங்கு அம்மை பாதிப்புக்கு முறையான சிகிச்சை முறை இதுவரை இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சையளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பாதிப்புக்குள்ளான நபர்களை, உடனடியாக தனிமைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, தோல் வெடிப்புகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும். வாய் புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் வாய் கொப்பளிப்பதன் மூலம் சரி செய்யலாம் என கூறப்படுகிறது.

நோய் பரவல் தீவிரம்
முதன்முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல்வேறு உலக நாடுகளில் பரவி பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த நாட்டு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் மேலும் 100 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் கண்காணிப்பு
ஏற்கனவே இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் மேலும் 104 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இங்கிலாந்தில் மட்டும் இதுவரை 470 பேர் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்நாட்டில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications