டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்து விட்டது 5ம் கட்ட தேர்தல்.. மொத்த வேட்பாளர்களில் 12% பெண்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: 5வது கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 12 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

17 வது மக்களவைக்கான தேர்தல் 4 கட்டங்கள் முடிவடைந்து 5 –வது கட்டம் இம்மாதம் 6 ம் தேதி நடைபெறவுள்ளது. பிகார், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

12% women candidates in 5th phase LS polls

அவ்வாறு அவர்கள் 5 ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 674 வேட்பாளர்களில் 668 பேர் குறித்து மேற்கொண்ட ஆய்வில் 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 19%. 22 பாஜக வேட்பாளர்கள் (46%) மீதும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 பேர் (31%) மீதும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் (27%) மீதும், சமாஜ்வாதி வேட்பாளர்கள் 7 பேர் (78%) மீதும், சுயேச்சை வேட்பாளர்கள் 26 (10%) மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

இதில் 14% வேட்பாளர்கள் அதாவது 95 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 6 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 21 பேர் மீது கொலைமுயற்சி வழக்குகளும், 5 வேட்பாளர்கள் மீது ஆள்கடத்தல் வழக்குகளும் உள்ளன. 9 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் உள்ளது. 5 பேர் மீது வெறுப்புப் பேச்சுகள் சார்ந்த வழக்குகள் உள்ளது.

நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 விழுக்காடாக உள்ளது. மொத்தம் 79 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த எண்ணிக்கை இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களை விட அதிகமாகும்.

முதல் கட்ட தேர்தலில் 89 பெண்கள் போட்டியிட்டனர்.

இரண்டாம் கட்ட தேர்தலில் 8%, போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 120. மூன்றாம் கட்ட தேர்தலில் 9% போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 143 . நான்காம் கட்ட தேர்தலில் 10% போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 96. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 184 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.

கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும் , லக்னோ தொகுதி வேட்பாளருமான பூனம் சத்ருகன் சின்ஹா தனக்கு ரூ.193 கோடி சொத்துகள் இருப்பதாகத் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். பிரகதிஷில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் விஜய்குமார் மிஸ்ரா லோஹியா தொகுதியில் போட்ட்யிடுகிறார். இவர் தனக்கு ரூ.177 கோடி சொத்துகள் இருப்பதாகத் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார் ஹசாரிபாக் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜெயந்த் சின்ஹா தனக்கு ரூ.77 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் கூறியுள்ளார்.

English summary
In the 5th phase of Lok sabha election, there are 12% women candidates are contesting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X