உத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் வேகமாக சென்ற லாரி, நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1:30 மணியளவில் பராபங்கி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பயணிகள் இறந்த நிலையில், மேலும் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லக்னோ-அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில், ராம் சானேஹி காட் காவல் நிலைய பகுதிக்கு அருகே, தாபாவில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பஸ்ஸில் 140 பேர் இருந்துள்ளனர். அதில் பலரும் பஸ் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்கி சாலையோரத்தில் படுத்து இருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த லாரி நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது.

இதனால் சம்பவ இடத்திலேயே 18 பேர் கொல்லப்பட்டனர். பஸ்சுக்கு அருகே படுத்திருந்தவர்கள் மீது லாரி மற்றும் பஸ் டயர்கள் ஏறியுள்ளன. தகவல் அறிந்ததும் விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இறந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. ஹரியானாவின் பல்வாலில் இருந்து பீகார் மாநிலத்திற்கு அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 19க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications