டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக பெரிய சிக்கல்.. மீண்டும் வரும் டெல்டா கொரோனா?? ஷாக் அடிக்கும் டெல்லி ஆய்வு முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்டா கொரோனா ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களையும் மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் சமூக தடுப்பாற்றல் உருவாவது சவாலான ஒன்றாக இருக்கும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை சமயத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. தினசரி பாதிப்பு, 4 லட்சத்தையும் தினசரி உயிரிழப்புகள் 40 ஆயிரத்தையும் கடந்தது.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்தியாவில் முதலில் தோன்றிய உருமாறிய டெல்டா கொரோனா பாதிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.

டெல்டா கொரோனா

டெல்டா கொரோனா

டெல்டா கொரோனா முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவை காட்டிலும் வேகமாகப் பரவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்டா கொரோனா குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் டெல்டா கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மற்ற வகைகளைக் காட்டிலும் 30-70% வரை வேகமாகப் பரவுவது தெரிய வந்துள்ளது. மேலும், ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்கும் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி

தலைநகர் டெல்லி

தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சில மாதங்களில் அது கட்டுக்குள் வந்தாலும் கூட, ஜூன், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் வைரஸ் அலை அலையாகத் தாக்கியது. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் நிலைமை மோசமானது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு வெறும் 15 நாட்களில் 2 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்ந்தது. கொரோனா இவ்வளவு சீக்கிரம் மோசமாகும் என்பதை யாரும் கணிக்கவில்லை. இதனால் டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியத் தொடங்கினர். அந்த சமயத்தில் டெல்லியில் பாசிட்டிவ் விகிதம் 56.1%ஆக அதிகரித்தது.

தடுப்பாற்றல்

தடுப்பாற்றல்

தலைநகர் டெல்லியில் வைரஸ் பாதிப்பு இந்தளவு அதிகமாக இருந்ததால், சீக்கிரம் Heard immunity எனப்படும் சமூக தடுப்பாற்றல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு கொரோனா ஆன்டிபாடி இருந்தால் சமூக தடுப்பாற்றல் உருவாகும். எந்தவொரு பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் இதுபோன்ற சமூக தடுப்பாற்றல் என்பது மிக முக்கியம். ஆனால், தலைநகர் டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா கொரோனாவால் சமூக தடுப்பாற்றல் உருவாவது சிக்கலான விஷயமாக ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா தொடர்பு இல்லை

உருமாறிய கொரோனா தொடர்பு இல்லை

அதேபோல டெல்டா கொரோா தவிர மற்ற உருமாறிய கொரோனா வகைகள் தலைநகர் டெல்லியில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஆல்பா கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் பிறகு மே மாதம் டெல்டா பாதிப்பு தலைநகர் டெல்லியில் உச்சம் தொட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு ஜூன் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அங்கு வைரஸ் அதிகரித்ததற்கும் உருமாறிய கொரோனா வகைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆன்டிபாடிகள்

கொரோனா ஆன்டிபாடிகள்

மக்கள்தொகையில் எத்தனை பேருக்கு ஆன்டிபாடி உள்ளது என்பதைக் கண்டறிய சிரோ சர்வே அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சிரோ சர்வே-இல் 42% பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரம் சில மாதங்கள் கழித்து 2ஆம் அலை முடிந்த பிறகு, இந்த சிரோ சர்வே நடத்தப்பட்ட போது, 88 பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பெரிய சவால்

பெரிய சவால்

கொரோனா ஆன்பாடிகள் அதிகரித்தாலும் கூட டெல்டா கொரோனா, ஏற்கனவே வைரசில் இருந்து குணமடைந்தவரையும் தாக்கும் திறன் கொண்டது என்பதால் அதை முடிவுக்குக் கொண்டு வருவது சிக்கல் என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல கொரோனா வேக்சின்கள் உயிரிழப்புகளையும் தீவிர கொரோனா பாதிப்புகளையும் குறைக்கும் என்றாலும் கூட, அது வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்தாது. இந்தப் பெருந்தொற்றை ஒழிப்பதில் இது மற்றொரு சவாலாகும். இதனால் டெல்டா கொரோனாவால் மற்றொரு அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்,

English summary
Herd immunity is difficult due to delta Coronavirus. Delhi Coronavirus latest news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X